search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம்
    X

    தமிழகம் முழுவதும் வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம்

    குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி பலர் பலியான சம்பவம் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் வனத்துறை அதிகாரிகள் பலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    சென்னை:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம், போடி மெட்டு, குரங்கணி பகுதியில் மலை ஏற்ற பயிற்சிக்காக சென்ற பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயில் சிக்கி பலியானார்கள். இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.

    விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்து, பல ஐ.எப்.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வனத்துறை முடிவு செய்தது. அதனடிப்படையில் நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகளை அரசு வழங்கியுள்ளது.

    மேலும், வனத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக பணி மூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. இதுபோன்ற காரணங்களை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் நசிமுத்தீன் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி தேனி மாவட்ட வன அதிகாரி இ.ராஜேந்திரன், கடலூர் மாவட்ட வன அதிகாரியாக மாற்றப்பட்டார். கடலூர் மாவட்ட வன அதிகாரியாக இருந்த சவுந்தர்ராஜன், கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி ஓய்வுபெற்றார். அதன்பிறகு கடந்த 2 மாதமாக அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    Next Story
    ×