என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "forest officials"
- இதையடுத்து 3 பேரும் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றனர்.
- குரங்குகளை பிடிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஓறையூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. நேற்று மாலை விவசாய வேலைக்கு சென்று திரும்பிய கூலி தொழிலாளர்கள் சரஸ்வதி (வயது 43), காத்தவராயன் (55), ஆசைத்தம்பி (53) ஆகிய 3 பேரை குரங்கு கடித்தது.
இதையடுத்து 3 பேரும் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றனர்.மேலும், இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக குரங்குகளை பிடிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
- சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே யானை, சிறுத்தை, மான் காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
நகுல வரம்-மொய்தீன்புரம் இடையே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 3 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது.
அந்த வழியாக காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
பின்னர் வீடியோவை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.
கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் சுற்றி திரியக்கூடாது.
கூடிய விரைவில் கிராமப் பகுதியை ஒட்டி சுற்றி திரியும் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சென்னை வனத்துறை விஜிலென்ஸ் பிரிவு உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் சிறப்பு குழுவினர்.
- தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் விசாரணையை தொடர்ந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்ட வனத்துறை திட்டப்பணிக ளில் முறைகேடு மற்றும் வன நிலங்கள் விற்பனை புகார் குறித்து விசாரிக்க சென்னை வனத்துறை விஜிலென்ஸ் பிரிவு உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் சிறப்பு குழுவினர் கடந்த 8-ந் தேதி சேலம் வந்தனர்.
அவர்கள் தொடர்ந்து அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் கோட்ட வன அலுவலகம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா , கருமந்துறை வனப்பகுதி ஆகிய இடங்களில் குழுவாக பிரிந்து வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் விசாரணையை தொடர்ந்தனர். மேலும் ஆவணங்கள்அ டிப்படையில் அறிக்கை தயாரிக்கும் பணியிலும் குழுவினர் ஈடுபட்டு வரு கிறார்கள். இதனால் இதில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கிட்டட்டிமட்டம் வனப்பகுதியில் மான்கள், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் மர்ம நபர்கள் மான் இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து வன அலுவலர் குருசாமி தபேலா, உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார், குந்தா, வனச்சரகர் சரவணன், வனவர்கள் ரவிக்குமார், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ஜெய்கணேஷ் ஆகியோர் கிட்டப்பட்டிமட்டம் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது வனப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் மான் கறி சமைத்துக்கொண்டிருந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் பெள்ளத்திகம்பை சேர்ந்த சரவணன் (வயது 27), ரங்கசாமி (40), நாகேஷ் (39), ரமேஷ் (36), கிருஷ்ணன் (36) என்பது தெரியவந்தது.
மேலும் வனப்பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிந்த மான்பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது. இதனையறிந்த நாங்கள் வனப்பகுதியில் கிடந்த மானின் உடலை சமைப்பதற்காக கூறுபோட்டோம் என கூறியுள்ளனர்.
அவர்கள் 5 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து மானின் இறைச்சி, கால்கள், தலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மான் வேட்டையில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்களா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை அடுத்துள்ள பெத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னு (வயது55). இவருக்கு சொந்தமாக விவசாயி நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.
இன்று காலை சின்னு தனது விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தார். அப்போது பயிரிட்டுள்ள வாழைமரங்களை 2 காட்டு யானைகள் சேதப்படுத்தி கொண்டிருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே யானையை விரட்ட சின்னு முயன்றார். ஆனால் யானை காட்டுக்குள் செல்ல மறுத்துவிட்டது.
இது குறித்து சின்னு வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சுமார் 1 அரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ள வாழைமரங்கள் காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் விவசாயி கவலை அடைந்தார்.
கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
அங்கு சில நாட்கள் சுற்றிய காட்டுயானை கடந்த 31-ந்தேதி நள்ளிரவு ஆழியாறு அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊருக்குள் நுழைந்தது. பொள்ளாச்சி வனத்துறையினர் யானையை கோபால்சாமி மலையில் விரட்டி விட்டனர்.
மறுநாள் 1-ந்தேதி மலை மற்றும் காடு, தோட்டங்களை கடந்து உடுமலை மைவாடி ரெயில் நிலையம் அருகே உள்ள புதருக்குள் யானை நின்றது. 80 கி.மீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து வந்த யானை பசி மற்றும் தூக்கத்தால் மயங்கியது. வனத்துறையினர் தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர். அதன்பின்னர் யானைக்கு மயக்கம் தெளிந்தது.
யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா வழக்கு தொடர்ந்தார். சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் கூறியது.
இந்நிலையில் யானையை விரட்ட வந்த கும்கி கலீமும், சின்னதம்பியும் நண்பர்களாகி விட்டன. கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களை மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தன.
யானையின் இந்த திடீர் மாற்றம் குறித்து அறிந்த கால்நடை டாக்டர் மனோகரன் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். காட்டுயானையை வேறு இடத்துக்கு மாற்றினால் ஆவேசமாக இருக்கும். சின்னதம்பி குழந்தைபோல் மாறியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றார்.
மாவட்ட வன அலுவலர் தீலிப், உடுமலை ரேஞ்சர் தனபால், அமராவதி ரேஞ்சர் முருகேசன், தலைமை வன அதிகாரி கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மீண்டும் சின்னதம்பிக்கு பிடித்த இடமான தடாகம் பகுதியிலேயே விட ஆலோசனை நடத்தினர்.
கும்கிகள் கரும்புடன் நடந்தால் அதனை பின் தொடர்ந்து சின்னதம்பியும் செல்லும் என்று யானை நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்று 5-வது நாளாக கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் மைவாடி ரெயில் நிலையத்துக்கும் இடையே சின்னதம்பி நிற்கிறது. அதன் போக்கிலேயே விட்டுபிடிக்க வனத்துறையினர் காத்திருக்கிறார்கள்.
பொதுமக்கள் வாழைப்பழம், மக்காச்சோள கதிர்களை கொண்டு வந்து பார்த்து வருகிறார்கள். கொண்டு வந்த தின்பண்டங்களை வன ஊழியர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் சின்னதம்பிக்கு கொடுக்கிறார்கள். சின்னதம்பி ஆசை ஆசையாக வாங்கி உண்கிறது.
சின்னதம்பியை இன்னும் ஒருவாரம் இதே பகுதியில் வைத்து அதன் உடல் நலம் மற்றும் மன நிலை நல்ல நிலைக்கு திரும்பிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்று வனத்துறை அதிகாரி கூறினர்.
சர்க்கரை ஆலையின் பின்புறம் சின்னதம்பி முகாமிட்டுள்ளதால் அதன் பாதுகாப்பு கருதி அது நடமாடும் பகுதியில் தேங்கிய கழிவு நீரை நிர்வாகம் மோட்டார் மூலம் வெளியேற்றியது. #ChinnaThambiElephant
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக வேலூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் சாத்துமதுரை என்ற பகுதியில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
அப்போது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில், இரண்டரை டன் செம்மரக் கட்டைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வேலூர் தாலுக்கா போலீசார் உதவியுடன் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக கடத்திச் செல்லப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. #RedSandalwoodCaptured #Andhra
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மங்கலம்டேம். அணையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் ரப்பர் தோட்டம், வாழை மற்றும் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.
தோட்டங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தி வருகிறது. இதனால் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். சில விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற கம்பிவேலி அமைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அங்குள்ள ரப்பர் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். கம்பி வேலிக்கு இடையே உள்ள ஒரு மதில் சுவர் அருகே இருந்து சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்த கரியங்கயம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் கால்நடை டாக்டர் மற்றும் மயக்க மருந்து செலுத்தும் உதவியாளருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தையால் ஓட முடியவில்லை. இதனால் மிக ஆக்ரோஷமாக இருந்தது.
இதனையடுத்து கால்நடை டாக்டர் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுத்தை மயங்கியது. பின்னர் அதனை கூண்டுக்குள் மீட்டனர். மயங்கிய நிலையில் உள்ள சிறுத்தையை பாதுகாப்பாக வனத்துக்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்