search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deer meat"

    • வனத்துறையினர் உலிக்கல் சுற்று வனத்தில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனத்துறையினர் உலிக்கல் சுற்று வனத்தில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உலிக்கல் சுற்று புளியமரத்துக்காடு ஆற்றுப்பகுதியில் இறந்துக்கிடந்த புள்ளிமான் கறியை எடுத்து சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்லார் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது40), சிவக்குமார் (33), கரட்டுமேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (21) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து 3 பேர் மீது வன உயிரினக் குற்ற வழக்கு பதிவு செய்து ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து சமைக்கப்பட்ட மான் இறைச்சியும் பட்டியலுடன் பறிமுதல் செய்தனர்.

    • பைக், மானின் தோல்கள் பறிமுதல்
    • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் (வயது 38) என்பவர் ராமாலை சுரைக்காய் பள்ளம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகை எடுத்து கடலை பயிரிட்டு வந்துள்ளார்.

    அப்பகுதியில் மான்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சுந்தரம் வயரால் நிலத்தில் பல இடங்களில் கன்னிகள் அமைத்து வைத்திருந்து உள்ளார்.

    நேற்று இரவு அந்த நிலத்திற்கு வந்த ஆண் மற்றும் பெண் புள்ளிமான் ஜோடி ஒன்று அந்த கன்னியில் சிக்கி உள்ளது.

    காலையில் சென்ற சுந்தரம் அந்த கன்னியில் சிக்கி இருந்த 2 மான்களை கொன்று அதன் இறைச்சியை துண்டுகளாகி விற்பனை செய்ய இருந்த போது வனத்துறைக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

    விரைந்து சென்ற குடியாத்தம் வனத்துறையினர் சுந்தரத்தை பிடித்து அவரிடம் இருந்து சுமார் 40 கிலோ மான் இறைச்சியும் 2 புள்ளி மான்களின் தோள்களும் இறைச்சி வெட்ட பயன்படுத்திய கத்திகள் எடைத்தராசு கம்பிகள் மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வனத்துறையினர் சுந்தரம் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப் பகுதிகளில் தீவிர வனத்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு மான்கறி விற்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

    • மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை மீட்டனர்.
    • வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    கோவை :

    கோவை ஆனைகட்டி பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் துவைப்பதி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் வனத்துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, மான் இறைச்சி சமைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். அருகில் இருந்த மற்றொரு வீட்டில் சோதனை செய்தபோது, முருகன் (வயது 49) என்பவர் துரைசாமி (65) என்பவருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. விசார ணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆனைகட்டியைச் சேர்ந்த கருப்பராயன் (39), ஜெயக்குமார் (31), ஜெகநாதன்(39) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில், முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்படி துவைப்பதியில் இருந்த ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை, கொடுவாள் ஆகியவற்றை மீட்டனர்.

    இதையடுத்து, மானைக் கொன்ற முருகனுக்கு ரூ.25 ஆயிரமும், மற்றவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் மூங்கில்பள்ளம் அருகே உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அங்குசென்ற வனத்துறையி னர் ரங்கசாமி (65) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தனது வளர்ப்பு நாயை விட்டு மான்களை கொன்று இறைச்சிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு (40), சுப்பிரமணி (45), ராமு (30), சிவதாஸ் (37), கந்தசாமி (40) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து மான் இறைச்சிகளை மீட்டனர்.அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    ஆனைகட்டி பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர். இதைத்தடுத்து நிறுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மஞ்சூர் அருகே மான்கறி சமைத்த 5 பேரை கைது செய்த வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கிட்டட்டிமட்டம் வனப்பகுதியில் மான்கள், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் மர்ம நபர்கள் மான் இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து வன அலுவலர் குருசாமி தபேலா, உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார், குந்தா, வனச்சரகர் சரவணன், வனவர்கள் ரவிக்குமார், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ஜெய்கணேஷ் ஆகியோர் கிட்டப்பட்டிமட்டம் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது வனப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் மான் கறி சமைத்துக்கொண்டிருந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் பெள்ளத்திகம்பை சேர்ந்த சரவணன் (வயது 27), ரங்கசாமி (40), நாகேஷ் (39), ரமேஷ் (36), கிருஷ்ணன் (36) என்பது தெரியவந்தது.

    மேலும் வனப்பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிந்த மான்பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது. இதனையறிந்த நாங்கள் வனப்பகுதியில் கிடந்த மானின் உடலை சமைப்பதற்காக கூறுபோட்டோம் என கூறியுள்ளனர்.

    அவர்கள் 5 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து மானின் இறைச்சி, கால்கள், தலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மான் வேட்டையில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்களா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    திண்டுக்கல் அருகே மான் இறைச்சி விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    கொடைரோடு:

    திண்டுக்கல் அருகில் உள்ள அம்மையநாயக்கனூரை சேர்ந்தவர் சிமியோன்ராஜா (வயது32). இவர் பெட்ரோல் பங்க் அருகே மான் இறைச்சி விற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வனத்துறை அலுவலர்கள் சுந்தர்ராஜன், ராஜேந்திரன் ஆகியோர் ரகசியமாக கண்காணித்தனர்.

    சிமியோன்ராஜாவிடம் சென்று இறைச்சி உள்ளதா? என கேட்டதற்கு மறைவாக வைத்து விற்பனைசெய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரையும் விற்பனைக்காக வைத்திருந்த மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் சிறுமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த மோசே (67) என்பவர் மான் வேட்டையாடி அதனை சிமியோன் ராஜாவிடம் விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் மாவட்ட வன அலுவலர் வித்யா முன்பு ஆஜர்படுத்தினர்.

    அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போலீசில் ஒப்படைத்து கைது செய்யப்பட்டனர்.
    ×