search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two arrest"

    திண்டுக்கல் அருகே மான் இறைச்சி விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    கொடைரோடு:

    திண்டுக்கல் அருகில் உள்ள அம்மையநாயக்கனூரை சேர்ந்தவர் சிமியோன்ராஜா (வயது32). இவர் பெட்ரோல் பங்க் அருகே மான் இறைச்சி விற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வனத்துறை அலுவலர்கள் சுந்தர்ராஜன், ராஜேந்திரன் ஆகியோர் ரகசியமாக கண்காணித்தனர்.

    சிமியோன்ராஜாவிடம் சென்று இறைச்சி உள்ளதா? என கேட்டதற்கு மறைவாக வைத்து விற்பனைசெய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரையும் விற்பனைக்காக வைத்திருந்த மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் சிறுமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த மோசே (67) என்பவர் மான் வேட்டையாடி அதனை சிமியோன் ராஜாவிடம் விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் மாவட்ட வன அலுவலர் வித்யா முன்பு ஆஜர்படுத்தினர்.

    அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போலீசில் ஒப்படைத்து கைது செய்யப்பட்டனர்.
    கடலூர் முதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்கூரை இரும்பு ஷீட்டுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பெரியகாரைக்காட்டை சேர்ந்த பார்த்திபன் (வயது 23), குடிகாட்டை சேர்ந்த பிரதீப் (18) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த மேற்கூரை இரும்பு ஷீட்டுகள் திடீரென காணாமல் போனது.

    இது பற்றி ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் எம்.புதூரை சேர்ந்த கார்த்தி (28) என்பவர் விசாரித்த போது, அந்த 55 இரும்பு ஷீட்டுகளை பார்த்திபன், பிரதீப் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வைத்து திருடிச்சென்றது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.55 ஆயிரம் ஆகும்.

    இது பற்றி கார்த்தி கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    திருக்கோவிலூர் அருகே விளைநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மேலப்பழங்கூர் கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான விளை நிலத்தில் பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவமாக திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேலப்பழங்கூருக்கு விரைந்து வந்து, விளை நிலத்தில் சோதனை நடத்தியதில், நிலத்தில் தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 பிளாஸ்டிக் கேன்களில் 630 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து போலீசார் எரிசாராய கேன்களை பறிமுதல் செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதேஊரை சேர்ந்த சூசைராஜ், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் எரிசாராயத்தை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து எரிசாராயத்தை பதுக்கி வைத்ததாக சூசைராஜ்(வயது 39), மணிகண்டன்(39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். 
    ×