search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cannabis Sized"

    உச்சிப்புளி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 196 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கியவர்களை தேடி வருகின்றனர். #cannabis
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, புகையிலை பொருட்கள், தங்கம் கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவுப்படி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக உச்சிப்புளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்தப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 98 பண்டல்களில் தலா 2 கிலோ வீதம் 196 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த போலீசார் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. #cannabis
    சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரெயிலில் 50 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். #Ganja
    ராயபுரம்:

    கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக பெங்களூர் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, இன்று காலை 6.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரெயில் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே போலீசார் இந்த ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பெட்டியில் 9 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அதற்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை.

    அவற்றை பிரித்து பார்த்த போது, அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த மூட்டைகளை எடுத்துச் சென்றனர்.

    அதில் மொத்தம் 50 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கஞ்சா மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.

    சோதனை காரணமாக இந்த ரெயில் அரை மணி நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பயணிகள் ரெயிலில் போலீசார் சோதனை செய்து கஞ்சா மூட்டைகளை எடுத்துச் சென்ற சம்பவம் கொருக்குப் பேட்டை ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கஞ்சா மூட்டைகளை ரெயிலில் கொண்டு வந்தது யார்? எங்கே கொண்டு சென்றனர் என்பது குறித்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Ganja
    ×