என் மலர்
உள்ளூர் செய்திகள்

மான் இறைச்சி சமைத்து சாப்பிட்ட 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்
- வனத்துறையினர் உலிக்கல் சுற்று வனத்தில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் வனத்துறையினர் உலிக்கல் சுற்று வனத்தில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உலிக்கல் சுற்று புளியமரத்துக்காடு ஆற்றுப்பகுதியில் இறந்துக்கிடந்த புள்ளிமான் கறியை எடுத்து சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்லார் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது40), சிவக்குமார் (33), கரட்டுமேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (21) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து 3 பேர் மீது வன உயிரினக் குற்ற வழக்கு பதிவு செய்து ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து சமைக்கப்பட்ட மான் இறைச்சியும் பட்டியலுடன் பறிமுதல் செய்தனர்.
Next Story