search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து 2-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்
    X

    விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து 2-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்

    பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து 2-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 21 மாத சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நேற்று முன்தினம் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி பிருத்விராஜ் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினர்.

    இதேபோல் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பிடும் பணிகளை 2-வது நாளாக புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநில தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    விடைத்தாள் மதிப்பிடும் பணியினை புறக்கணித்து ஜெயங்கொண்டத்தில் ஜாக்டோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். பணி வரன்முறை செய்ய வேண்டும். நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் ஆசிரியர், அலுவலர் பணியிடங்களை குறைக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினை உடன் கலைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் நம்பிராஜ் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி கோபிநாத், தமிழக தமிழாசிரியர் கழகம் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் சங்க அமைப்பு செயலாளர் முத்தமிழ்செல்வன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் வெள்ளச்சாமி, ஜெயராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் ஆசிரிய, ஆசிரியைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழக தமிழாசிரியர் கழக நிர்வாகி தமிழ்மாறன் நன்றி கூறினார்.
    Next Story
    ×