search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவி விவகாரத்தில் பெண் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்த வேண்டும்- திருமாவளவன்
    X

    நிர்மலாதேவி விவகாரத்தில் பெண் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்த வேண்டும்- திருமாவளவன்

    பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பெண் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #nirmaladevi

    திருச்சி:

    தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து 4 கட்ட போரட்டங்களை பொதுமக்களுடன் வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். ஆனால் மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. எனவே கவர்னரை சந்தித்து மனு கொடுத்து உள்ளோம்.

    காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக கண்காணிப்பு குழு அல்லது மேற்பார்வை குழு என ஏதாவது ஒன்றைத்தான் மத்திய அரசு அமைக்கும். இருப்பினும் தொடர் போராட்டங்கள் மூலமாக சட்ட ரீதியாக பெற வேண்டிய உரிமையை பெறுவோம். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் இரு வேறு விசாரணை என்பது சட்டத்திற்கு புறம்பானது. மேலும் ஒரு பெண்ணிடம் ஆண்கள் விசாரணை நடத்துவது மிகமிக மோசமான நடைமுறை. 


    எனவே பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அதில் உறுப்பினர்களாக பெண்களே இருக்க வேண்டும். பொய் வழக்குகள் மூலம் காவிரி போராட்டத்தை நசுக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

    வன்கொடுமை சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தலித் மக்களுக்கு எதிரானதாக உள்ளது. இதற்கு அகில இந்திய அளவில் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டன குரல்களை எழுப்பியுள்ளன. தமிழகத்தில் பா.ம.க. தவிர மற்ற கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #thirumavalavan #nirmaladevi 

    Next Story
    ×