என் மலர்

  நீங்கள் தேடியது "Nirmaladevi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவிக்கு, 11 மாதங்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்ததையடுத்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்துள்ளார். #NirmalaDevi
  சென்னை:

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டதால் நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் மிரட்டி தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி தெரிவித்திருந்தார்.

  முருகன், கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய, நிலையில், நிர்மலா தேவிக்கு கடந்த 12ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியது.  இதையடுத்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் ஜாமீன் பொறுப்பு ஏற்றனர். அத்துடன், தலா 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு பிரமாண பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து, நிர்மலா தேவி, இன்று ஜாமீனில் விடுதலையானார்.

  சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிர்மலா தேவி, செய்தியாளர்களை சந்திக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் எடுக்க தேவையான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருவதால் அவர் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. #NirmalaDevi
  மதுரை:

  அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் 16-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

  அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு மதுரை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

  ஐகோர்ட்டு கடந்த 12-ந்தேதி ஜாமீன் வழங்கியும் இன்னும் நிர்மலாதேவி விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

  இதுகுறித்து அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

  பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் எடுக்க அவரது ரத்த சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள். நிர்மலா தேவியின் தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரது சகோதரர் பெயரில் வீட்டு வரி ரசீது இல்லாததால் ஜாமீன் ஆவணங்கள் தயார் செய்வதில் ஓரிரு நாள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  வருகிற 18-ந்தேதி ஜாமீன் ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். மறுநாள் (19-ந்தேதி) நிர்மலாதேவி நிச்சயம் விடுதலை ஆவார். அதற்கான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுத்து வருகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  வருகிற 19-ந்தேதி நிர்மலாதேவி விடுதலை ஆனால் ஜாமீன் கிடைத்தும் ஒரு வாரம் தாமதத்துடன் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. #NirmalaDevi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் நிர்மலா தேவியை நாளை ஆஜர்படுத்தும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi #HighCourtMaduraiBench
  மதுரை:

  அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  கைது செய்யப்பட்டவர்களில் முருகன், கருப்பசாமி ஆகியோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றனர். ஆனால் நிர்மலா தேவிக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை.  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர், உரிய விசாணை நடத்தப்படவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

  இதை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின்னர், ஜாமீன் கேட்டு நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

  இந்நிலையில், நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாளை பிற்பல் நிர்மலாதேவியை விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையையும் நாளைக்கு ஒத்திவைத்தது.

  முன்னதாக நிர்மலாதேவி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, தனது கட்சிக்காரர் நிர்மலா தேவிக்கு உரிய சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

  நாளை இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது, நிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீதும் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #NirmalaDevi #HighCourtMaduraiBench

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  6 மாதங்களாக ஜெயிலில் உள்ள நிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று காட்பாடியில் முத்தரசன் பேசினார். #mutharasan #nirmaladevi

  வேலூர்:

  ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில மாநாடு டிசம்பர் 19-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதுதொடர்பான வரவேற்புக் குழு கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது.

  இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-

  பாலியல் தொல்லை பற்றி பெண்கள் தற்போது வெளிப்படையாக புகார் கூறிவருவது வரவேற்கத்தக்கது. பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் அதிகாரம் படைத்த ஆணையத்தை அமைக்க வேண்டும்.

  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கடந்த 3-ந் தேதியில் இருந்து மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  மத்திய-மாநில அரசுகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணாதது கண்டிக்கத்தக்கது.

  பாலாற்றில் புதிய மணல் குவாரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மணல் குவாரி அமைத்தால் பாலாறு வறண்டு போகும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

  எனவே, பாலாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தென்பெண்ணை, பாலாற்றை இணைக்கும் திட்டத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தமிழகத்தில் ஜனநாயக முறையில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த அடக்குமுறையை கண்டித்து வரும் 16-ந் தேதி தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும்.


  பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 6 மாதங்களாக ஜெயிலில் உள்ளார். நிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இவர் சம்பந்தப்பட்ட பாலியல் புகாரில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியும்.


  பாலியல் புகாரில் சிக்கியவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும் என்றார்.

  பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். #mutharasan #nirmaladevi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிர்மலாதேவி மீதான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாஜிஸ்திரேட்டு மாற்றி உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase

  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

  அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

  இந்த வழக்கு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கைதான 3 பேர் மீதும் 1360 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

  இந்த நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று 3 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி குற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவி மீதான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 6-வது முறையாக இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
  மதுரை:

  அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

  இந்த வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி உள்பட 3 பேர் பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் வழக்கின் தன்மை கருதி ஜாமீன் வழங்கவில்லை.

  இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன் 6-வது முறையாக ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குரல் பரிசோதனைக்காக நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச்செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
  மதுரை:

  குரல் பரிசோதனைக்காக நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச்செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக தொலைபேசியில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானது.

  இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

  இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய மதுரையில் உரிய வசதி இல்லாததால், அவரை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

  அந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

  விசாரணை முடிவில், நிர்மலாதேவியை குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்துச் செல்வதற்கு வருகிற 27-ந்தேதி (நாளை) முதல் 29-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
  மதுரை:

  அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய செல்போன் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் கூறப்பட்டதன் அடிப்படையில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

  அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

  3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். காமராஜர் பல்கலைக்கழகம், தேவாங்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றிலும் விசாரணை நடத்தப்பட்டது.

  தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

  சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை, நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வந்து விசாரணை நடத்தியது.


  துறைத்தலைவர்கள், மூத்த பேராசிரியர்கள் என 36 பேரிடம் இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நடந்தது.

  இரவு 7.30 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் இன்று 2-வது நாளாக மீண்டும் பல்கலைக்கழகம் சென்று விசாரணை நடத்தினர்.

  நிர்மலாதேவிக்கும், பல்கலைக்கழகத்திற்கும் உள்ள தொடர்பு, உயர் அதிகாரிகளுடன் தொடர்பு என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடக்கிறது.

  இதற்கிடையே நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. தரப்பு வக்கீலாக சிறப்பு அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு வருகிற 28-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #Murugan #Karuppasamy
  விருதுநகர்:

  அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

  சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கூறினார்.

  அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  முருகன், கருப்பசாமியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இருவரும் இன்று காலை மதுரை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.1) ஆஜர்படுத்தப்பட்டனர்.

  அவர்களை வருகிற 28-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் உத்தரவிட்டார். முருகன் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி, அவரது மனைவி சுஜா கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

  அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவருக்கு ஜாமீன் கிடைத்த பிறகு உங்களை சந்திக்கிறேன். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க நீங்கள் உதவ வேண்டும் என்றார். #NirmalaDevi #Murugan #Karuppasamy
  ×