என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  11 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் நிர்மலா தேவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவிக்கு, 11 மாதங்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்ததையடுத்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்துள்ளார். #NirmalaDevi
  சென்னை:

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டதால் நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் மிரட்டி தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி தெரிவித்திருந்தார்.

  முருகன், கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய, நிலையில், நிர்மலா தேவிக்கு கடந்த 12ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியது.  இதையடுத்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் ஜாமீன் பொறுப்பு ஏற்றனர். அத்துடன், தலா 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு பிரமாண பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து, நிர்மலா தேவி, இன்று ஜாமீனில் விடுதலையானார்.

  சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிர்மலா தேவி, செய்தியாளர்களை சந்திக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi
  Next Story
  ×