என் மலர்

  செய்திகள்

  பேராசிரியை நிர்மலாதேவி விடுதலையில் தாமதம் ஏன்?- வக்கீல் பரபரப்பு தகவல்
  X

  பேராசிரியை நிர்மலாதேவி விடுதலையில் தாமதம் ஏன்?- வக்கீல் பரபரப்பு தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் எடுக்க தேவையான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருவதால் அவர் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. #NirmalaDevi
  மதுரை:

  அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் 16-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

  அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு மதுரை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

  ஐகோர்ட்டு கடந்த 12-ந்தேதி ஜாமீன் வழங்கியும் இன்னும் நிர்மலாதேவி விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

  இதுகுறித்து அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

  பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் எடுக்க அவரது ரத்த சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள். நிர்மலா தேவியின் தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரது சகோதரர் பெயரில் வீட்டு வரி ரசீது இல்லாததால் ஜாமீன் ஆவணங்கள் தயார் செய்வதில் ஓரிரு நாள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  வருகிற 18-ந்தேதி ஜாமீன் ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். மறுநாள் (19-ந்தேதி) நிர்மலாதேவி நிச்சயம் விடுதலை ஆவார். அதற்கான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுத்து வருகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  வருகிற 19-ந்தேதி நிர்மலாதேவி விடுதலை ஆனால் ஜாமீன் கிடைத்தும் ஒரு வாரம் தாமதத்துடன் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. #NirmalaDevi
  Next Story
  ×