search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் 40 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது
    X

    ரெயிலில் 40 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது

    விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு ரெயிலில் 40 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
    சென்னை:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று அதிகாலை வந்த ரெயிலில் ஒரு பெண் உள்பட 3 பேர் 20 அட்டை பெட்டிகளுடன் வந்து இறங்கினார்கள்.

    அவர்கள் அங்கிருந்து ஆட்டோ ஒன்றை பிடித்து அட்டை பெட்டியை ஏற்றினர். அந்த 3 பேரின் நடவடிக்கையிலும் ஆட்டோ டிரைவர் ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மூவரையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ரெயில் நிலைய முன்பகுதியில் இருந்து புறப்பட்டார்.

    பார்க் ரெயில்நிலையம் அருகில் ரோந்து போலீசார் ஒரு ஜீப்பில் நின்று கொண்டிருந்தனர். ஆட்டோ டிரைவர் வண்டியை நேரடியாக அங்கு நின்ற போலீஸ் ஜீப் அருகில் கொண்டு நிறுத்தினார். ஆட்டோவில் உள்ள அட்டை பெட்டியில் சந்தேகம் இருப்பதாக கூறினார். போலீசாரை பார்த்ததும் ஆட்டோவில் இருந்த 2 பேர் தப்பி ஓடினார்கள். ஒரு பெண் மட்டும் சிக்கினார். பெட்டியை உடைத்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது. 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தபோது சிக்கிக் கொண்டனர்.

    பெரியமேடு போலீஸ் நிலையத்திற்கு பிடிபட்ட பெண்ணை அழைத்து சென்று விசாரித்த போது திண்டுக்கல்லை சேர்ந்த செல்வி என தெரியவந்தது. பெரியமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வியை கைது செய்தனர். பாலமுருகன் உள்பட 2 பேரை தேடி வருகிறார்கள், விஜயவாடாவில் இருந்து கஞ்சா எந்த பகுதிக்கு கடத்தி செல்ல திட்டமிடப்பட்டது. இதனை யாருக்கும் சப்ளை செய்ய இருந்தார்கள். இந்த கடத்தலில் ஈடுபட்ட கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் மூலம் கஞ்சா கடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் சென்ட்ரல் ரெயில்வே போலீசார் இதனை கோட்டை விட்டு விட்டனர்.  நேர்மையான ஆட்டோ டிரைவரின் நடவடிக்கையால் கஞ்சா கடத்தல் கும்பல் பிடிப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×