search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் ஆட்சேபமில்லை- ஜெயக்குமார்
    X

    பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் ஆட்சேபமில்லை- ஜெயக்குமார்

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #NirmalaDevi
    சென்னை:

    சென்னை அடையாறில் அமைச்சர்  ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை; ஆனால் மாநில காவல்துறையே சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை உண்மை நிலையை வெளிப்படுத்தும்

    வேந்தர் என்ற அடிப்படையில் குழு அமைக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது. பேராசிரியை விவகாரத்தில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் பெயர் அடிபடுவது பற்றி சி.பி.சி.ஐ.டி. தான் விசாரிக்க முடியும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்

    பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியது பற்றி அரசு எதுவும் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×