search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழை
    X

    குமரி மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழை

    குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கோடை மழையால் குமரி குளிர்ந்தது. வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ணம் நிலவியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்தது. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலும் கடும் வெயிலால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள். மலை கிராமங்களிலும் மழை இல்லாததால் பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டது.திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் குறைந்தது.

    குளங்கள், கால்வாய்கள் நீரின்றி வற்றிப்போகும் நிலை உருவானது. அதிகாலையிலேயே சூரியன் சுட்டெரிக்க தொடங்குவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே தயங்கினர்.

    குமரியில் வெயிலின் தாக்கத்தை தணிக்க கோடை மழை பெய்யாதா? என்று மக்கள் ஏங்கி வந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் கடந்த வாரம் லேசான சாரல் மழை பெய்தது.

    கொட்டாரம், மயிலாடி பகுதிகளில் மட்டும் அவ்வப் போது பெய்த மழை, கனமழையாக பெய்ய வில்லை. ஆனால் கோடை மழை தொடங்கியதின் அறிகுறி மட்டும் தெரியவந்தது.

    கொட்டாரம் பகுதியில் தொடங்கிய கோடை மழை மெல்ல மெல்ல மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. 4 நாட்களுக்கு முன்பு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் பெய்தது.

    தொடர்ந்து களியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் முதல் நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளிலும் கோடை மழை பெய்தது.

    குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கோடை மழையால் குமரி குளிர்ந்தது. வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ணம் நிலவியது. இரவு நேரங்களிலும் புழுக் கத்தில் தவித்த மக்கள், நேற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இன்று காலையிலும் மாவட் டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கார்மேகம் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது.

    குமரி மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பூதப்பாண்டி-17.2, கன்னிமார்-16.2, கொட்டாரம்-17.8, குழித்துறை-8, நாகர்கோவில்-15.6, பேச்சிப் பாறை-2, பெருஞ்சாணி-4.4, புத்தன் அணை-3.6, சுருளோடு-18.6, தக்கலை-4.2, முள்ளாங்கினாவிளை-8, கோழிப்போர் விளை-4.5, பொய்கை அணை-3.6, மாவட்டம் முழுவதும் சராசரியாக 6.72 மி.மீ. அளவிற்கு மழை பெய்துள் ளது.

    கோடை மழை தொடங்கிய பின்னர் குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். இதற்கான தண்ணீர் பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாயி களுக்கு வழங்கப்படும். தற்போது பேச்சிப்பாறை அணையில் புனரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையில் தற்போது தண்ணீர் தேக்கி வைக்கப்பட வில்லை. ஆனால் பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத் துறையாறு, பொய்கை அணைகளில் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை கன்னிப்பூ சாகுபடிக்கு அளித்தாலும், பாசனம் முழுமை பெறும் அளவிற்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை 1 அடி, பெருஞ்சாணி 57.70 அடி, சிற்றாறு-1-10.27, சிற்றாறு-2-10.37, மாம்பழத்துறையாறு-51.76, பொய்கை அணை-16.10.

    Next Story
    ×