search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்- 150 பேர் கைது
    X

    விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்- 150 பேர் கைது

    எஸ்.சி-எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை திருத்தம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று விடுதலை சிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    எஸ்.சி-எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை திருத்தம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலை முன்பு இன்று விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டனர்.

    பின்னர் மாநில பொது செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் அங்கிருந்து ஊர்வலமாக ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.

    மாவட்ட செயலாளர் ஆற்றல்அரசு, வக்கீல்கள் தமிழ்மாறன், சரவணன், சேரலாதன், நிர்வாகிகள் தமயந்தி, கார்வேந்தன், பெரியார், இரணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலை விடுதலை சிறுத்தை கட்சியினர் மறித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். சிலர் என்ஜின் மீது ஏறி நின்றும், தண்டவாளத்தில் படுத்து கிடந்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    தகவல் அறிந்து வந்த விழுப்புரம் போலீசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். 

    Next Story
    ×