search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாரியம்மன் கோவில் தேரோட்டம்- உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    X

    மாரியம்மன் கோவில் தேரோட்டம்- உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

    உடுமலையில் புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் தேர்திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன் தினம் மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    தேரோட்டத்தை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மகேந்திரன் எம்.பி., திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இந்த தேர் பழைய பஸ் நிலையம், தளிரோடு, குட்டைதிடல், தங்கம்மாள் ஓடை, பொள்ளாச்சி சாலை உள்பட முக்கிய வீதிகளை வலம் வந்து மாரியம்மன் கோவிலை அடைந்தது.

    தேரோட்டத்தில் உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தில் வக்கீல் சிதம்பரசாமி, கார்த்திக், அசோக்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் ரத்தினசாமி, செந்தில் குமார், திருமூர்த்தி மலை கரிய வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் சி.என். ராமராஜ் ராமானுஜதாசன், கார்த்திக் முத்து, செல்வரத்தினம், வக்கீல்கள் துரைக் கண்ணன், சீனிவாசன், மற்றும் லெஸ்கி பால்ராஜ், உதய கணேஷ், கோபால கிருஷ்ணன், ஏ.எம். பாஷா, சசி கணேஷ் குமார், பரமேஸ்வரன், ஆதிநாராயணன், தெலச குட்டி, டாக்டர்கள் சதிஷ்குமார், பிரதீப் சக்கரவர்த்தி, ஹரிகிருஷ்ணன்,வி.என் பொன்ராஜூ, அருண்குமார், இளங்கோ, ராமசாமி, செல்வராஜ், காந்திசெல்வம், செந்தில்குமார், மகேந்திரன், கார்த்திக் பிரகாஷ், மனோகரன், ஜோதி சுப்பிரமணி, வேலுச்சாமி, வெங்கிடுபதி, லோகநாதன், சரவண குமார், ரவி, நவீன்குமார், சிவகுமார்,கிருஷ்ணன், சண்முகம், சந்திர மூர்த்தி, அம்பிகாவதி, மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. செயலாளர் மனோகரன்,ரவிச்சந்திரன், சேகர், மலர் ஸ்டிபன், சத்யம் பாபு,கந்தசாமி, ஜோதீஸ்வரி கந்தசாமி, ராஜலட்சுமி, குமார், சுப்புராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு 10 மணிக்கு உடுமலை குட்டை திடலில் வாணவேடிக்கை நடக்கிறது.

    Next Story
    ×