search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்
    X

    திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்

    ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மறியல், கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டம் நடைபெற்றது.

    கோவையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோவை ரெயில் நிலையம் முன் திரண்டனர். அவர்கள் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    இதில் நிர்வாகிகள் ஜேம்ஸ், சண்முகம், தேவராஜ், தங்கவேலு, கோவிந்தராஜ், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் ரெயில் நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றனர்.

    போலீசார் தடுப்பு வேலி அமைத்து அவர்களை தடுத்தனர். இதனையும் மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் உருவானது.

    போலீசாருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு நிலவியது. முற்றுகையில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.100-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதனால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள முதலாவது ரெயில்வே கேட் பகுதிக்கு மறியலுக்கு சென்றனர்.

    அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அதனையும் மீறி மறியலுக்கு சென்றனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு உருவானது. போலீசாரின் தடையையும் மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்தனர்.

    அப்போது திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு சரக்கு ரெயில் சென்றது. அந்த ரெயில் வேகமாக வந்தது. ஆனாலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தண்டாவளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதனால் சரக்கு ரெயில் டிரைவர் வண்டியை நிறுத்தினார். அதனை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

    Next Story
    ×