search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோகைமலை கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து நாளை சாலை மறியல் போராட்டம்
    X

    தோகைமலை கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து நாளை சாலை மறியல் போராட்டம்

    தோகைமலையில் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து நாளை சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குளித்தலை அருகே வதியம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எங்களது ஊராட்சியில் காவிரி ஆற்று படுகையில் ஏற்கனவே மருங்காபுரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் ஒரு திட்டமாக தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த இருந்ததை எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தோம். கடந்த 2017-ம் ஆண்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் அறிவிப்பின் போது நடந்த அமைதி பேச்சுவார்த்தையை ஊர் பொதுமக்கள் புறக்கணித்தோம். இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 15-ந் தேதி மீண்டும் தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டம் வேலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் எங்களது கிராமத்தின் விவசாயமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (புதன்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தி, குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம். இதற்கு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கரூர் நகராட்சி 44-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘கரூரில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் பொன்னகர் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு விட்டது. புதிய நிழற்குடை கட்டித்தர வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். #tamilnews
    Next Story
    ×