search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான சுமதி, கைதான ஜெயலட்சுமி
    X
    பலியான சுமதி, கைதான ஜெயலட்சுமி

    ஆரணியில் 6 மாத கருவை கலைத்த கர்ப்பிணி பலி

    ஆரணியில் நாட்டு மருந்து கொடுத்து 6 மாத கருவை கலைத்த கர்ப்பிணி பெண் பலியானார். இந்த சம்பவம் குறித்து கருக்கலைப்பு செய்த பெண்னை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுமதி (வயது 36). இவருக்கும், சென்னையை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் கவிதா என்ற பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சுமதி கணவனை விட்டு பிரிந்து களம்பூரில் உள்ள தனது தாய்வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் கூலிவேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார்.

    கணவரிடம் சேர்ந்து வாழ்ந்து வாழாத நிலையில் கர்ப்பமடைந்ததால் ஊராரின் கேலிக்கு ஆளாக கூடும் என்று எண்ணினார். இதனால் சுமதி தனது வயிற்றில் உள்ள 6 மாத கருவை கலைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தியின் மனைவி ஜெயலட்சுமியை அணுகினார். ஆடுமேய்க்கும் தொழில் செய்து வரும் ஜெயலட்சுமி நாட்டுவைத்தியம் மூலம் பலருக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சுமதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமியின் வீட்டுக்கு சென்று தனக்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என்று கூறினார்.

    6 மாதத்திற்குமேல் ஆனதால் கருக்கலைப்பு செய்ய முடியாது என்று ஜெயலட்சுமி கூறியுள்ளார். ஆனால் சுமதி எப்படியாவது கருக்கலைப்பு செய்து விடுங்கள் என அவரிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதனால் வேறு வழியின்றி அவருக்கு கருக்கலைப்பு செய்வதற்கான நாட்டுமருந்தை ஜெயலட்சுமி கொடுத்து தனது வீட்டில் தங்கவைத்துள்ளார்.

    இந்த நிலையில் சுமதிக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் கரு கலைந்தது. சிறிது நேரத்தில் சுமதியும் இறந்துவிட்டார். இந்த சம்பவம் கிராமம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் அதுபற்றி களம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுமதிக்கு கருக்கலைப்பு செய்த ஜெயலட்சுமியை கைது செய்தனர்.

    அவர் இதேபோல் வேறு பெண்களுக்கும் கருகலைப்பு செய்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    அதை தொடர்ந்து அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    Next Story
    ×