search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே ஆரம்ப சுகாதார நிலையம்- பள்ளியில் கலெக்டர் ஆய்வு
    X

    செந்துறை அருகே ஆரம்ப சுகாதார நிலையம்- பள்ளியில் கலெக்டர் ஆய்வு

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகளில் கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.
    செந்துறை:

    செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனந்தவாடி, கீழமாளிகை, இரும்புலிக் குறிச்சியில் உள்ள அரசு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார். அப்போது ஆனந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவேடு, அறிவியல் ஆய்வகம்,  கழிப்பறை, மாணவர்களுக்கு வழங்கும் உணவை சோதனை செய்தார்.

    மேலும் ஆனந்தவாடி அங்கன் வாடி மையத்தில் குழந்தை களுக்கு வழங்கப்படும் சத்து உருண்டை மாவு, உணவின் தரம்,குழந்தைகளுக்கு அளிக்கப் படும் பயிற்சியை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து இரும்புலிக் குறிச்சி ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகள், கர்ப்பிணிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை குறித்து கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.

    பின்னர் கீழமாளிகை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் 201617ன்கீழ் ரூ.8 லட்சத்தில் ராஜமூர்த்தி என்பவர் கிணறு அமைக்கும் பணி, வீரக்கான் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டிட கட்டுமான பணியை ஆய்வு செய்தார். செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் மற்றும் மருத்துவர், செவிலியர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×