search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் விரும்பும் கலைநயமிக்க கத்வால் சேலைகள்
    X

    பெண்கள் விரும்பும் கலைநயமிக்க கத்வால் சேலைகள்

    அதிகபட்ச அழகும், அணிவதற்கு இலகுவான சேலையாகவும் விளங்கும் கத்வால் சேலைகள் என்பது பருத்தி சேலைகள் மற்றும் பட்டு சேலைகளாக கிடைக்கின்றன.
    துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிக்கு மத்தியில் உள்ள சிறு நகரமே கத்வால். இந்நகரம் கைத்தறி நெசவுக்கு மிகவும் பிரபலமானது. அதாவது கத்வால் பட்டு சேலை என்றாலே அதன் புகழ் அறிய வரும். கத்வால் சேலைகள் அழகிய சரிகை வேலைப்பாடு, நன்கு நெய்யப்பட்டு குட்டு பார்டர்கள் என்பது எடை குறைந்தவாறு சுலபமாக பராமரிக்க கூடிய வேலையாகவும் விளங்குகிறது. அதிகபட்ச அழகும், அணிவதற்கு இலகுவான சேலையாகவும் விளங்கும் கத்வால் சேலைகள் என்பது பருத்தி சேலைகள் மற்றும் பட்டு சேலைகளாக கிடைக்கின்றன.

    கத்வால் சேலையை நெய்பவர்கள் என்பவர் இந்து தெய்வங்களுக்கு நெசவு செய்து தந்த ஜிவேஷ்ஹர் மகராஜ் வழி வந்தவர்களாம். இச்சேலை என்பது பெரும்பாலும் பண்டிகை மற்றும் விழாக்களுக்கு மட்டும் பயன்படுத்த ஏற்ற சேலையாக நெய்யப்பட்டன. அதாவது இறையம்சம் பொருந்திய சேலையாகவே கத்வால் சேலைகள் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் 1946-ல் ஆரம்பிக்கப்பட்ட கத்வால் சென்டர்-மூலமே இதன் சிறப்பு இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம்.

    கத்வால் சேலை என்பது ஜரிகை பேட்டர்ன் தனியாகவும், சேலை தனியாகவும், குட்டு பார்டர் தனியாக நெய்யப்பட்டு பின் இணைக்கப்படுகிறது. முழு புடவை என்பது பருத்தி நூலால் நெய்யப்பட்டு அதன் பார்டர்கள் மட்டும் தூய்மையான மல்பெரி பட்டு மற்றும் டஸ்ஸர் பட்டுகளால் நெய்யப்படுகிறது.

    கத்வால் சேலை நெய்யும் முறை என்பது “குப்படம்” என கூறப்படுகிறது. இதன் பார்டர் நெய்யும் ஸ்டைல் “கும்பம்” என கூறப்படுகிறது. கத்வால் சேலைகள் மிகவும் எடை குறைவானவை. இந்த முழு சேலையை அப்படியே மடித்து கொண்டே வந்தால் ஒரு தீப்பெட்டி அளவிற்கு கொண்டு வரமுடியும். பட்டு நூல் மற்றும் பருத்தி நூல் இணைந்தவாறு கத்வால் சேலைகள் நெய்யப்படுகின்றன. நாகரிக வடிவமைப்புடன் அனைத்து வயதினரும் அணிய ஏற்றவாறு அழகுடன் கத்வால் சேலைகளின் உருவாக்கம் உள்ளன.



    வண்ணமயமான கத்வால் சேலைகள்

    அனைத்து வண்ணங்களிலும் அழகிய கத்வால் சேலைகள் கிடைக்கின்றன. இயற்கை நிறச்சாயல் மற்றும் பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் வண்ண சிறப்பு என்றவகையில் கத்வால் சேலைகள் சிறப்பிடம் பெறுகின்றன. மாறுபட்ட வண்ண சேர்க்கை மற்றும் உலகளாவிய சிறப்பை பெறும் வகையில் இருவகை வண்ண கலவை என புதிய வடிவில் கத்வால் சேலைகள் வந்துள்ளன.

    சேலையில் பதியப்படும் உருவங்கள், சிற்பங்கள் என்பவை கோவில் சின்னங்கள், பூக்கள், இயற்கை வடிவங்கள் என்பதுடன் நவீன கணினி வடிவமைப்புகளாக கணித உருவங்கள் போன்றவை பதியப்படுகின்றன. சரிகை வேலைப்பாடு என்பது தங்க சரிகை மற்றும் வெள்ளி சரிகை கொண்டவாறு நெய்யப்படுகின்றன. பார்டர் மற்றும் புட்டா பகுதிகள் பட்டு நூல் பின்னணியில் நெய்யப்படுவதால் சரிகையின் ஜொலிப்பு அழகுடன் வெளிப்படுகிறது.

    மேற்கத்திய நாடுகளிலும் விரும்பப்படும் கத்வால் சேலைகள்

    அதிக மவுசு மற்றும் விற்பனை பொருளாக கருதப்படும் கத்வால் சேலைகள் மேற்கத்திய நாடுகளில் அதிகமாக விரும்பப்படுகிறது. மிக சிறப்புமிகு பரிசளிப்பு பொருளாக கத்வால் சேலைகள் இருப்பதுடன், நிறைய சேலைகள் எடுத்து சென்றாலும் எடை அதிகம் இருக்காது என்பதும் மிக முக்கிய காரணமாக உள்ளது. கத்வால் சேலையை பராமரிப்பது சுலபமானதாக உள்ளதாலும் அனைவரும் அதிகமாக விரும்புகின்றனர். வீட்டில் கத்வால் சேலையை துவைக்கும்போது முதல் மூன்று முறை வெறும் தண்ணீரில் மட்டும் அலசி காய வைத்திட வேண்டும். அதன் பின்னரே குறைவான சோப்புதூள் போட்டு துவைத்து கொள்ளலாம். அதுபோல் அதிக சூரிய ஒளி படும்படி காய வைக்காமல் சற்று நிழலில் காய வைப்பது சிறந்தது.

    கத்வால் சேலைகள் என்பது சிகோ சேலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. கத்வால் சேலைகள் அதில் உள்ள கைவினை நெசவிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. திருமணம் மற்றும் முக்கிய விழாவிற்கு என பிரத்யேக ஆர்டர் மூலம் நெய்யப்படும் சேலைகளின் விலை மிக கூடுதலாக இருக்கும். சுமார் ரூ.10,000/- லிருந்து ஆரம்பிக்கும் கத்வால் பட்டு சேலைகள், பருத்தி சேலை எனும்போது சற்று விலை குறைவாகவே காணப்படுகிறது. 
    Next Story
    ×