search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான விருதுநகர் மட்டன் சுக்கா
    X

    சூப்பரான விருதுநகர் மட்டன் சுக்கா

    விருதுநகர் மட்டன் சுக்காவை தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த சுக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்னவெங்காயம் - 200 கிராம்
    எலும்பில்லாத மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 30 கிராம்
    சீரகத்தூள் - 40 கிராம்
    மிளகாய்த்தூள் - 20 கிராம்
    நல்லெண்ணெய் - 30 மில்லி.
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், பொன்னிறமாக வந்தவுடன் மட்டனையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    மட்டன் நன்கு வெந்தது தண்ணீர் ஏதும் இல்லாமல் டிரையாக வந்தவுடன், சீரகத்தூளை தூவி, உப்பு சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான விருதுநகர் மட்டன் சுக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×