search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளி தினத்தன்று வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்
    X

    தீபாவளி தினத்தன்று வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்

    தீபாவளி தினத்தன்று வீட்டில் மட்டுமின்றி கோவில்களுக்கு சென்று தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பலன்களை பெற முடியும்.
    தீபாவளி தினத்தன்று வீட்டில் மட்டுமின்றி கோவில்களுக்கு சென்று தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பலன்களை பெற முடியும்.

    பொதுவாக செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மாலையில் கோவிலில் விளக்கு ஏற்றி வருவது நல்லது. நெய்தீபம் ஏற்றினால் கிரகதோஷம் நீங்கும்.
    வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றினால் திருமணம் நடைபெறும் மற்றும் வியாபாரம் நன்கு நடைபெறும், கிரகதோஷங்கள் நீங்கும்.

    எண்ணெய் தீபம் ஏற்றினால் அஷ்டமத்து, ஏழரைச்சனி, செவ்வாய் தோஷம், ராகு, கேது பீடை அகலும். மனசஞ்சலம் இருக்காது. குத்துவிளக்கு ஐந்து முகம் ஏற்றி விளக்கின் பாதத்தில் குங்கும அர்ச்சனை செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும். சொத்து வாங்கலாம். கடன் தீரும்.

    நெய்தீபம் ஏற்றினால் பாவம் நீங்கும், வேலை கிடைக்கும். விநாயகருக்கு விளக்கேற்றினால் கேது தோஷமும் காரியத் தடைகளும் நீங்கும். சிவாலய தீபம் கண் நோயைத் தீர்க்கும். சவுபாக்கியம் கூடும்.

    தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றினால் படிப்பு நன்றாக வரும். பிரயாணத்தில் இடைஞ்சல் வராது. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜர் கோவிலில் ஒவ்வொரு திருவாதிரை அன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, அதனால் ஏற்படும் பலனை அனுபவித்து வருகின்றனர்.

    மேலும் கோவிலுக்கு நல்ல எண்ணெய் நம்மால் முடிந்த அளவு வாங்கிக் கொடுக்கலாம். நிறைய கோவில்களில் தீபம் ஏற்ற இயலாத நிலைமையில் உள்ளது. அதுபோன்ற கோவில்களுக்கு எண்ணெய் வாங்கிக் கொடுப்பது நம்முடைய குடும்பத்திற்கே நல்லது.

    தீபம் எப்படி கோவிலுக்கு வெளிச்சம் கொடுக்கிறதோ அதுபோல நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும். கோவிலுக்கு நெய், நல்ல எண்ணெய் வாங்கிக் கொடுக்கும் போது நெய், எண்ணெய் மட்டும் வாங்கிக் கொடுக்க கூடாது. திரியும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

    ஆன்மீகச் சிந்தனையில் முதலில் வீட்டில் அந்த சூழ்நிலையை உருவாக்குவது முக்கியம். அதிகாலை வேளையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிட்டால் அங்கு லட்சுமி தாண்டவமாடுவாள் என்பது ஐதீகம். கோலத்தைச் சுற்றி செம்மண் பூசினால் பகவானையும் தாயாரையும் நம் வீட்டுக்கு அழைக்கிறோம் என்பது பொருள். அரிசி மாவில் கோலமிடுவதன் மூலம் எறும்புகளுக்கு உணவு கிடைக்கிறது. இதனால் பெரும் புண்ணியம் ஏற்படும். இவ்வாறு புண்ணியம் தரும் கோலத்தை வீட்டிலுள்ள குடும்பத்தலைவிகள் அல்லது பெண் குழந்தைகளே போட வேண்டும். வீட்டு வேலையாட்களை கோலம் போடச் சொல்லக்கூடாது.

    வீட்டில் காலையிலும் மாலையிலும் பூஜையின்போது திருவிளக்கு ஏற்றி வழிபடுவது என்றும் இறைவனின் துணையுள்ள நன்மை தரும் தூய சக்தியை வீட்டில் வரவழைக்க ஏதுவான முக்கிய வழியாகும்.

    திருவிளக்கு அசையாமல் எரியும்போது அதை விடாமல் பார்த்துக் கொண்டிருந்தால் சஞ்சலமுள்ள மனது நிலைப்படும். தீப ஒளியைப் பார்ப்பது ஒரு வகை ‘குட்டி தியானம்‘ என்றால்கூட மிகையாகாது. திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையில்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30 மணிக்கு ஏற்றுவதே நமது மரபு. இதை ‘கருக்கல்’ நேரம் என்பர்.

    சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பு இருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.

    திருவிளக்கு மும்மூர்த்தி உருவம் என்று கூறப்படுகிறது. ஆசனமாகிய அடிப்பகுதி பிரம்மன் என்றும், நடுத்தண்டாகிய மத்திய பகுதி விஷ்ணு என்றும், அகல் பகுதி சிவன் என்றும், அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன் என்றும், சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீட்டுக்கு வீடு ஐந்து திரி இரட்டைத்திரி நான்கு திரி ஒற்றைத்திரி என அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப விளக்கேற்றுகிறார்கள். திருவிளக்கை ஏற்றினால் வீட்டில் துஷ்ட சக்திகள் அணுகாது என்பது பழங்கால நம்பிக்கை. அறிவியல் ரீதியாக விளக்கெரிக்க நல்லெண்ணெய் பயன்படுத்துவதே நல்லது.

    ஏனெனில் இதிலிருந்து பரவும் மணத்தில் இரும்புச் சத்து இருக்கிறது. செம்பு, வெள்ளி, அலுமினியம் ஆகிய வகை விளக்குகளை ஏற்றும்போது மனித உடலில் எந்த உலோகத்தின் பற்றாக்குறை இருக்கிறதோ அது ஈடுகட்டப்படுகிறது என்பதும் ஒரு நம்பிக்கை.
    Next Story
    ×