search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வர்ணம் தீட்டப்பட்டு கோவில் கோபுரம் புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்
    X
    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வர்ணம் தீட்டப்பட்டு கோவில் கோபுரம் புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்

    திருவானைக்காவல் கோவில் கும்பாபிஷேகம் - டிசம்பர் மாதம் 12-ந் தேதி நடத்த முடிவு

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி, அதன்படி, கடந்த 2012-ம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் தள்ளிப்போனது.

    பின்னர், கோவில் நிர்வாகம் மற்றும் பக்த பிரமுகர் களின் முயற்சியால் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வருகிற டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடித்து 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நவராத்திரி மண்டபத்தில் ஒரு யாகசாலையும், கீழவாசல் சவுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் மற்றொரு யாகசாலையும் அமைக்கப்பட உள்ளது. நவராத்திரி மண்டபத்தில் அமைக்கப்படும் யாகசாலையில் டிசம்பர் 7-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி 9-ந் தேதி காலை ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்கள் மற்றும் பரிவார தேவதைகள் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    சவுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் அமையும் யாகசாலையில் 10-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி 12-ந் தேதி காலை பிரதான சன்னதிகளான பிரசன்ன விநாயகர், ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி விமானங் களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து டிசம்பர் மாதம் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறையின் அனுமதிபெற கோவில் நிர்வாகம் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவல்களை கோவில் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. 
    Next Story
    ×