search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு நடக்கும் முக்கிய விழாக்கள்
    X

    திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு நடக்கும் முக்கிய விழாக்கள்

    தமிழ் கடவுள் முருகப் பெருமான் அருள் ஆட்சி புரியும் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பன்னிரெண்டு மாதமும் விழாக்கோலம் தான்.
    தமிழ் கடவுள் முருகப் பெருமான் அருள் ஆட்சி புரியும் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பன்னிரெண்டு மாதமும் விழாக்கோலம் தான். இதில் பங்குனி மாதத்தில் பங்குனி பெருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை திருவிழா, தை மாதத்தில் தெப்பத் திருவிழா ஆகிய 3 திருவிழாக்களில் மட்டுமே கொடியேற்றத்துடன் வெகு விமர்ச்சியாக விழா நடைபெறும்.

    பொதுவாக ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் 6-ம் நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். இந்த நடைமுறை அனைத்து முருகன் கோவிலிலும் உண்டு. ஆனால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பொறுத்தவரை ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி திருவிழா பங்குனி மாதத்தில் பங்குனி பெருவிழா கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழா என ஆண்டிற்கு 3 முறை சூரசம்ஹாரம் நடக்கிறது.

    இதேபோல ஆண்டிற்கு 3 முறை பட்டாபிஷேகம் நடக்கிறது. இந்த கோவிலுக்கு சிறிய மற்றும் பெரிய தேர் உள்ளது. இதில் கார்த்திகை தை மாதத்தில நகரின் முக்திய ரத வீதிகளில் சிறிய தேரோட்டமும், பங்குனி மாதத்தில் கிரிவலப் பாதையான 3 கிலோ மீட்டர் சுற்றளவில் மகா தேரோட்டம் நடக்கிறது. ஆகவே ஆண்டிற்கு 3 முறை தேரோட்டமும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பரங்குன்றம் கோவிலின் அமைப்பு

    திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.

    சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்புகளும், இதர சிற்ப அம்சங்களும் உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.

    அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவுவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண் கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைத் திறனைக் காட்டும் முருகன் தெய்வானை திருமணக்கோலம் போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.
    Next Story
    ×