என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய் 62 படத்தில் மெர்சல் கனேக்ஷன்
Byமாலை மலர்23 Jan 2018 2:56 PM GMT (Updated: 23 Jan 2018 2:56 PM GMT)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் ‘மெர்சல்’ படத்தின் கனேக்ஷன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
விஜய்யின் 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குநராக அனல் அரசு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, விஜய்யின் கத்தி, பைரவா, மெர்சல் ஆகிய படங்களுக்கும் அனல் அரசு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
விஜய் 62 திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×