என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தொடர்ந்து தள்ளிப்போகும் கமல் படம்
Byமாலை மலர்11 Nov 2017 6:53 AM GMT (Updated: 11 Nov 2017 6:53 AM GMT)
கமல்ஹாசன் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரது இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி படத்தின் தொடர்ச்சி அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'.
இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தில் குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. சில பிரச்சனைகளால் `விஸ்வரூபம்-2' கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், `விஸ்வரூபம் 2' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக தெரிவித்த கமல், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். இதுஒருபுறம் இருக்க `விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் சிறப்பாக வந்திருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் கமல் ஒரு பாடலை பாடியிருப்பதாகவும் ஜிப்ரான் கூறியிருந்தார்.
இவ்வாறாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் `விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தலைப்பில் உருவாகி வரும் `விஸ்வரூபம்-2' படத்தில், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×