search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காலா காரை கேட்ட மகேந்திரா நிறுவனத்துக்கு தனுஷ் அளித்த பதில்
    X

    'காலா' காரை கேட்ட மகேந்திரா நிறுவனத்துக்கு தனுஷ் அளித்த பதில்

    ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தில் அவர் பயன்படுத்தும் காரை கேட்ட மகேந்திர நிறுவனத்தினருக்கு தனுஷ் பதில் அளித்துள்ளார்.
    ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடித்து வரும் படத்துக்கு ‘காலா’ என்று தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்றில் ரஜினி மகேந்திரா நிறுவனத்தின் ‘தார்’ என்ற ஜீப்பின் மேல் அமர்ந்திருப்பார். இந்த போஸ்டரை பார்த்த மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்க்யூட்டிவ் சேர்மன் ஆனந்த் மகேந்திரா, அந்த காரை தனது நிறுவனத்தின் அருங்காட்சியத்தில் வைக்க ஆசைப்படுவதாக தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.



    இதற்கு, காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், மிக்க நன்றி. அந்த வாகனத்தை தற்போது சூப்பர் ஸ்டார் படப்பிடிப்பில் பயன்படுத்தி வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் உங்களிடம் கொண்டுவந்து உறுதியாக சேர்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். பதிலுக்கு, ஆனந்த் மகேந்திராவுக்கு தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    ‘காலா’ படத்தில் ரஜினியுடன் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, ‘வத்திக்குச்சி’ திலீபன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×