search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    புகைப்படம்: நன்றி விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன்
    X
    புகைப்படம்: நன்றி விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன்

    அரை மணி நேரத்தில் மூம்பை டூ பூனே - விரைவில் இந்தியா வரும் ஹைப்பர்லூப் ஒன்

    மும்பையில் இருந்து பூனேவிற்கு வெறும் 25 நிமிடங்களில் பயணம் செய்யும் வகையில் விரைவில் ஹைப்பர்லூப் ஒன் திட்டம் கட்டமைக்கப்பட இருக்கிறது.
    மும்பை:

    இந்தியாவில் ஹைப்பர்லூப் ஒன் திட்டத்தை கட்டமைக்கும் முதல் மாநிலமாக மகாராஷ்ட்ரா இருக்கிறது. சமீபத்தில் மகாராஷ்ட்ரா அரசு மற்றும் விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனமிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மும்பையில் இருந்து பூனே வரையிலான தூரத்திற்கு ஹைப்பர்லூப் கட்டமைப்பு பணிகள் துவங்கப்பட இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

    மும்பை மற்றும் பூனே இடையே ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்து 2024-ம் ஆண்டு வாக்கில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழிபாதையில் உள்ள சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தை ஹைப்பர்லூப் மூலம் வெறும் 25 நிமிடங்களில் கடக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    2012-ம் ஆண்டு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் முதல் முறையாக ஹைப்பர்லூப் திட்டத்திற்கான கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தார். இந்த கான்செப்ட் முற்றிலும் சீலிடப்பட்ட டியூப்களினுள் பெரிய பாட் மூலம் காற்று மற்றும் உராய்வு போன்றவற்றால் தடையின்றி இதுவரை இல்லாத அளவு வேகத்தில் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.



    ரிச்சார்டு பிரான்சன் தலைமையில் இயங்கும் விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன் அமெரிக்க நிறுவனம் ஆகும். ஹைப்பர்லூப் கான்செப்ட்-ஐ வணிக மயமாக்கி, அதில் பயணிகள் மற்றும் கார்கோ பொருட்களை வான்வழி பணத்தை விட குறைவான நேரத்தில் கடக்கும் பணிகளில் பிரான்சன் ஈடுபட்டு வருகிறார்.

    மகாராஷ்ட்ரா அரசுடன் ஹைப்பர்லூப் ஒன் மேற்கொண்டு இருக்கும் ஒப்பந்தத்தின் படி ஐக்கிய அரபு எமிரேட், வடக்கு ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் முதல்முறையாக வெளியிடப்பட இருப்பதை ஹைப்பர்லூப் ஒன் உறுதி செய்துள்ளது.

    உலகில் வியாபார ரீதியாக அதிகம் பேர் பயணம் செய்யும் வழித்தடமாக மும்பை-பூனே இருக்கிறது. இரு நகரங்களுக்கும் தினசரி அடிப்படையில் பல லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் ஹைப்பர்லூப் ஒன் செயல்படுத்த சிறந்த வழித்தடமாக இது இருக்கிறது. 

    இருவழி பயணங்களின் போது ஒரு மணி நேரத்தில் 10,000 பேர் வரை பயணம் செய்ய முடியும் என விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன் தெரிவித்துள்ளது. முழுமையாக பயணம் செய்யும் போது அதிகபட்சம் 15 கோடி பேர் பயணம் செய்ய முடியும். சோதனை அடிப்படையில் இந்த வழிதடத்திற்கான பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவுறும் என பிரான்சன் அறிவித்துள்ளார். 

    புகைப்படம்: நன்றி விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன்
    Next Story
    ×