search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்
    X

    இந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் ரியல்மி பிராண்டு தனது புதிய ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைப்பதாக அறிவித்துள்ளது. #RealmeU1



    இந்தியாவில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகமாகும் போது ரியல்மி யு1 மாடல் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ரக நாட்ச், டூயல் கேமரா செட்டப், பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், 6.3 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் வழங்கப்படுகிறது.



    ரியல்மி யு1 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2350x1080 பிக்சல் 19.5:9 ஃபுல் ஹெச்.டி. + ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
    - 900MHz ARM மாலி-G72 MP3 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஸ்மார்ட்போனின் விலை குறைப்பினை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விலை குறைப்பின் படி ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×