search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    முதல் முறையாக வெளியான ஜியோ போன் 5ஜி படங்கள்! வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    முதல் முறையாக வெளியான ஜியோ போன் 5ஜி படங்கள்! வெளியீடு எப்போ தெரியுமா?

    • ஜியோ போன் 5ஜி பின்புறம் பிளாஸ்டிக் பேக், நடுவே கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது.
    • இந்த மாடலில் 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஜியோ போன் 5ஜி என்று அழைக்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய ஜியோ போன் 5ஜி பற்றிய அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. டுவிட்டர் பயனர் ஒருவர் புதிய ஜியோ போன் 5ஜி மாடல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் மற்றும் சில அம்சங்கள் தெரியவந்துள்ளது.


    தோற்றத்தில் ஜியோ போன் 5ஜி மாடல் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் இதர ஸ்மார்ட்போன்களை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் பிளாஸ்டிக் பேக், நடுவே கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது. முன்புறம் வாட்டர் டிராப் நகர நாட்ச் உள்ளது. இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஜியோ பிரான்டிங் மற்றும் 5ஜி என்று எழுதப்பட்டு உள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் மற்றொரு புகைப்படத்தில் ஜியோ 5ஜி நெட்வொர்க்கில் டெஸ்ட் முடிவுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஜியோ போன் 5ஜி மாடலில் 470Mbps டவுன்லோடு வேகமும், 34Mbps அப்லோடு வேகமும் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஜியோ போன் 5ஜி மாடல் தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் யுனிசாக் 5ஜி பிராசஸர் அல்லது மீடியாடெக் டிமென்சிட்டி 700 சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்த ஜியோ போன் 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×