search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஒரே நாளில் நான்கு சாதனங்கள் - அசத்தல் டீசர் வெளியிட்ட ஒன்பிளஸ்..!
    X

    ஒரே நாளில் நான்கு சாதனங்கள் - அசத்தல் டீசர் வெளியிட்ட ஒன்பிளஸ்..!

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் விரைவில் அறிமுகமாகிறது.
    • புதிய சாதனங்களுக்கென ஒன்பிளஸ் நிறுவனம் பிர்தயேகமாக மைக்ரோசைட் உருவாக்கி இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 3 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதே நிகழ்வில் ஒன்பிளஸ் நார்டு CE3 5ஜி, ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மற்றும் புல்லட்ஸ் Z2 ANC இயர்பட்ஸ் உள்ளிட்ட சாதனங்களையும் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.

    ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு பட்ஸ் 2R மாடல்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு CE 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நார்டு 2 மற்றும் நார்டு CE 2 ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.


    புதிய சாதனங்களுக்கென ஒன்பிளஸ் நிறுவனம் பிர்தயேகமாக மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் சாதனங்கள் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு CE 3 5ஜி மாடலின் பின்புறம் இரண்டு ரிங்குகள் உள்ளன. இவற்றில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் அலர்ட் ஸ்லைடர் காணப்படுகிறது.

    நார்டு CE 3 5ஜி மாடலின் மேல்புறம் ஐ.ஆர். பிலாஸ்டர் உள்ளது. நார்டு 3 5ஜி மாடல் டெம்பஸ்ட் கிரே மற்றும் மிஸ்டி கிரீன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. நார்டு CE 3 5ஜி மாடல் அக்வா சர்ஜ் நிறத்தில் கிடைக்கும். ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மாடல் டீப் கிரே மற்றும் டிரிபில் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

    நார்டு பட்ஸ் 2 இயர்போன் அதன் முந்தைய மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 ANC மாடல் பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. பெயருக்கு ஏற்றார்போல் இந்த இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×