search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேண்ட்ஸ்காம்ப்"

    இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆரோன் பிஞ்ச், மார்ஷ் சகோதரர்கள், ஹேண்ட்ஸ் காம்ப் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். #AUSvSL
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்திய வீரர்கள் ஐந்து சதங்கள் அடித்த போதிலும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

    குறிப்பாக ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் ஆகியோரால் எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. அதேபோல் ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக களம் இறங்கி சாதிக்க முடியவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சொற்ப ரன்களே சேர்த்தார்.



    இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்த நான்கு பேரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். புகோவ்ஸ்கி, ஜோ பர்ன்ஸ், ரென்ஷா ஆகியோர் அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டிம் பெய்ன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 2. ஹசில்வுட், 3. ஜோ பர்ன்ஸ், 4. கம்மின்ஸ், 5. மார்கஸ் ஹாரிஸ், 6. டிராவிஸ் ஹெட், 7. உஸ்மான் கவாஜா, 8. மார்னஸ் லாபஸ்சேக்னே, 9. நாதன் லயன், 10. வில் புகோவ்ஸ்கி, 11. ரென்ஷா, 12. மிட்செல் ஸ்டார்க், 13. பீட்டர் சிடில்.

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 24-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. 2-வது போட்டி பிப்ரவரி 1-ந்தேதி கான்பெர்ராவில் தொடங்குகிறது.
    சிட்னி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பதில் தாமதம ஏற்பட்டுள்ளது. பிஞ்ச், மிட்செல் மார்ஷ் நீக்கப்பட வாய்ப்புள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் சிட்னியில் நாளை தொடங்குகிறது. பொதுவாக போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாளே ஆஸ்திரேலியா, அணியில் இடம்பிடிக்கும் 11 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும்.

    சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்காமல் இருக்க முடியும் என்பதால் ஆஸ்திரேலியா தீவிர சிந்தனையில் உள்ளது. சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அணியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்துள்ளது.



    ஆரோன் பிஞ்ச் 6 இன்னிங்சில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். மெல்போர்ன் டெஸ்டில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நீக்கப்பட்டு மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார். சிட்னியில் இருவரையும் நீக்கிவிட்டு சுழற்பந்து வீச்சாளர் மானர்ஸ் லாபஸ்சேக்னே மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோரை சேர்க்க ஆஸ்திரேலியா ஆலோசனை செய்து வருகிறது.

    இதனால் போட்டி தொடங்குவதற்கு முன் ஆடுகளத்தை பார்த்த பின்னர்தான் ஆடும் லெவன் அணி அறிவிக்கப்படும் என ஆஸ்திரேலியா கூறிவிட்டது.
    அடிலெய்டு டெஸ்டில் ஆஸ்திரேலியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது. ஹெட் அரைசதத்தால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா நேற்றைய 250 ரன்னிலேயே ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


    ஹேண்ட்ஸ்காம்ப்

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.

    5-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 34 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.


    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இஷாந்த் சர்மா

    8-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.


    கவாஜாவிற்கு எதிராக அப்பீல் கேட்கும் அஸ்வின், விராட் கோலி

    தற்போது வரை ஆஸ்திரேலியா 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் ஸ்டார்க் துணையுடன் இந்தியாவின் ஸ்கோரை எட்ட முயற்சி செய்வார்.
    ×