search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீமூகாம்பிகா"

    • தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு
    • போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

    திருவட்டார்:

    குலசேகரம் நாகக்கோடு பகுதியில் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் வி.இ. ரோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27), முதுநிலை பயிற்சி மயக்கவியல் துறை நிபுணராக 2-ம் ஆண்டு படித்து வந்தார். இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தாவின் அறை கதவு நேற்றுமுன்தினம் திறக்கப்படவில்லை.

    இதனால் சக மாணவிகள் தகவல் தெரிவித்ததையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது சுகிர்தா பிணமாக கிடந்தார். சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து குலசேகரம் போலீசாருக்கும், சுகிர்தாவின் பெற்றோ ருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுகிர்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தன்னுடன் படித்த மாணவர் ஹரிஷ் மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து குலசேகரம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியர் பரமசிவம் மற்றும் ஹரிஷ், ப்ரீத்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன் நேரில் விசாரணை மேற்கொண்டார். நேற்று காலை தொடங்கிய விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. இரவு 9.30 மணி வரை போலீசார் சுகிர்தாவுடன் படித்த சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட னர். மேலும் சுகிர்தா சம்பவத்தன்று யாருடன் எல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என்பது குறித்த விவரங்களையும் சேகரித்துள்ளனர். இதற்கிடையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சுகிர்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது தந்தை சிவக்குமார் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த நிலையில் பரம சிவம், ஹரிஷ், ப்ரீத்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணைக்கு பிறகு 3 பேரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    ×