search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்பிரிட் கடத்தி கைதான"

    • போலீசார் தமிழக- கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து வேனில் கடத்திய சுமார் 7 ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள ஸ்பிரிட்டை போலீசார் பறி முதல் செய்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த தமிழக- கர்நாடகா எல்லை யில் அமைந்துள்ளது புளி ஞ்சூர் சோதனைசாவடி. இங்கு போலீசார் மற்றும் வனத்துறை சோதனை சாவடி அமைந்துள்ளது.

    கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் வாகன ங்களும், தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் வாகனங்கள் இங்கு சோத னைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கர்நாடக வில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு மது வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் தமிழக- கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அநத வழியாக கேரளா பதிவு எண் கொண்ட ஒரு ஈச்சர் வேன் வந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெங்காய மூட்டை இருந்தது.

    மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் வெங்காய மூட்டைகளை இறக்கி பார்த்த போது வெங்காய மூட்டை அடியில் கேன்களில் ஸ்பிரிட் இருந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ஹரி மற்றும் வினோத் என்பதும், அவர்கள் மைசூரில் இருந்து கேரளாவுக்கு மதுவுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் வெங்காய மூட்டைக்கு அடியில் பதுக்கி கடத்தி சென்றதும் தெரியவந்து.

    இதையடுத்து வேனில் கடத்திய சுமார் 7 ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள ஸ்பிரிட்டை போலீசார் பறி முதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×