search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஹேந்திரா & மஹேந்திரா"

    மஹேந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கும் நிலையில், மராசோ காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #marazzo


    மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் இந்தியாவில் புதிய மராசோ எம்.பி.வி. காரினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய மராசோவின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே காரின் எல்இடி டெயில் லைட் டீஸ் செய்யப்பட்டு இருந்தது.

    இந்தியாவில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வரும் மராசோ காரின் ஹெட்லேம்ப் வடிவமைப்பு சார்ந்த டீசரை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய காரில் ட்வின்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. 
     
    கூர்மையான முன்புறம் கொண்ட மராசோ மாடலில் க்ரோம் க்ரில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஷார்க் போன்ற எல்இடி டெயில் லைட் கிளஸ்டர், பக்கவாட்டில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட அலாய் வீல்கள் ஷார்க்கை தழவி உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மொராசோ மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ளது.

    மஹேந்திரா மராசோ கார் ஏழு அல்லது எட்டு பேர் அமரக்கூடிய வெர்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மராசோ என்ற வார்த்தைக்கு ஸ்பெயின் மொழியில் ஷார்க் என அர்த்தமாகும். இந்த ஷார்க் உருவத்தை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 



    புதிய கார் தற்போதைய மஹிந்திரா மாடல்களுக்கு மாற்றாக அமையாமல், புதிய காராக வெளியாகிறது. மராசோ தோற்றம் சார்ந்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், டேஷ்போர்டு புகைப்படங்கள் வெளியானது. அதன் படி மஹிந்திரா மராசோ மாடலில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதன் உள்புறங்களில் XUV மாடலை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிட்ஸம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பியானோ பிளாக் பேனலிங் மற்றும் புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலின் இருக்கைகளில் பிரீமியம் லெதர் டிராப்களால் செய்யப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டாவுக்கு போட்டியாகும் என்பதால், மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற மஹிந்திரா வாகனங்களை விட அதிகளவு இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடலில் வழங்கப்பட்டதை போன்ற ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    ×