search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்மை பல்கலைக்கழகம்"

    • ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

    கோவை:

    தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கும். இந்த மழையானது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

    கேரள மாநிலத்தில் அதிகம் பெய்யும் தென் மேற்கு பருவமழை அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கொட்டித்தீர்க்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:-

    எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்துக்கான (ஜூன் முதல் செப்டம்பர்) மழை பற்றிய முன்னறிவு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கம் ஆகியவை ஆராய்ச்சி மேற்கொண்டன.

    இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு 2023-ம் ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

    அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 6 இளநிலை, 3 தொழில்முறை பாடப்பிரிவுகள் உள்ளன.
    • இணையவழி விண்ணப்ப பதிவு துவங்கியது.

    திருப்பூர் : 

    கோவை தமிழ்நாடு வேளாணபல்கலை க்கழகத்தில் இள நிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொட ங்கியது. விண்ணப்பிக்க ஜூன் 9ந் தேதி கடைசி நாள்.இம்முறை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்படும் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கையும், இணைந்து நடக்கிறது.வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், 14 இளநிலை, 3 டிப்ளமோ படிப்புகளுக்கும், மீன்வள பல்கலையின் கீழ் 6 இளநிலை, 3 தொழில்முறை பாடப்பிரிவுகள் உள்ளன.இளநிலைபட்டப்படி ப்புக்குமாணவர்கள் ஒரே விண்ணப்பத்தை பதிவு செய்தால் போதும். இணையவழி விண்ணப்ப பதிவு துவங்கியது. ஜூன் 9ந் தேதி கடைசி தேதி. விண்ணப்ப கட்டணமாக, எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., மாணவர்கள் 250 ரூபாயும், சக மாணவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். tnau.ucanapply.com மற்றும் tnagfi.ucanapply.com என்ற இணையதளங்களில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலை tnau.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுஉள்ளன.

    இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-

    மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும்மீன்வள பல்கலைக்க ழகத்தின் மாணவர்சேர்க்கை செயல்பாடுகள் ஒருங்கி ணைக்க ப்பட்டுள்ளன.உறுப்பு கல்லூரிகளில், 3,363 இடங்களும், இணை ப்பு கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,806 இடங்களும் , மீன் வள பல்கலைக்கழகத்தின் கீழ் 345 இடங்களும் கவுன்சிலிங் வாயிலாக நிரப்பவுள்ளோம்.சந்தேகங்கள் இருந்தால் வேளாண் படிப்புகளுக்கு 0422- 6611345, 6611346, 94886-35077, 94864-25076 ஆகிய எண்களிலும், நாகப்பட்டினம் மீன்வளம் பல்கலைக்கழகத்தை 04365-256430, 94426 -01908 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடத்தப்படும்.நடப்பாண்டில் இளநிலையில் பி.டெக்., பயோ இன்பர்மேடிக்ஸ், பி.டெக்., அக்ரி இன்பர்மேசன் டெக்னாலஜி புதிதாக தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 18 இடங்களும், மாற்றுத்திற னாளிகளுக்கு 125 இடங்கள், முன்னாள் ராணுவ வீரர் பிரிவில் 18 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 463 இடங்கள், தொழில்முறை பாடப்பிரிவு மாணவர்களுக்கு 246 இடங்கள், ஐ.சி.ஏ.ஆர்., நுழைவுத்தேர்வு வாயிலாக வருபவர்களுக்கு, 20 சதவீதஒதுக்கீடும் வழங்கப்படுகின்றன.10-ம்வகுப்பு தேர்வுமு டிவுகள் வெளியானவுடன் வேளாண் பல்கலையின் கீழ் பட்டயப்படிப்புக்கான சேர்க்கைகளும் ஆன்லைன் வாயிலாக நடைபெறும். tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., பிரிவினர் 100 ரூபாயும், சக மாணவர்கள் 200 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்தவேண்டும்.

    ×