search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேகத்தடைகள்"

    • விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
    • தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் சாலைகளை மேம்படுத்த வேண்டும்

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட் டத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சாலை பாது காப்பு சம்பந்தமான ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் பாஸ்கரன், வடக்கு போலீஸ் சூப்பிரண்டு நித்தின் கவுஹால் ரமேஷ், நகராட்சி ஆணையர் செந்தில்நாதன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சிதம்பர நாதன், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர்.கண்ணகி மற்றும் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்ட னர்.

    கூட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகம் மற்றும் அடிக்கடி நடைபெறும் இடங்களை, போக்குவரத்து போலீசார் கண்டறிய வேண்டும். மேலும் காரைக்காலில் குறுக்கு சாலைகளில் விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும். காரைக்காலில் விபத்து களை குறைக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப் பட்ட துறை அதிகாரி கள் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சா லைகளுடன் இணையும் சாலைகளை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக காரைக்காலில், விபத்துகள் நடைபெறும் பொழுது ஆம்புலன்ஸ்கள் காலதாம தமாக செல்வதாக புகார்கள் வந்துள்ளன. அதை இனி தவிர்க்க வேண்டும். 108 ஆம்பு லன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். என கலெக்டர் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

    • அதிகமாக 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது கல்லட்டி மலைப்பாதையாகும்.
    • வனவிலங்குகள் பாதுகாப்புக்காக அங்கு வேகத்த டைகள் அமைக்க வன ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை பாதைகள் அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட தாகும்.

    இதில் அதிகமாக 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது கல்லட்டி மலைப்பாதை யாகும். மலைப்பாதைகளில் வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்ல அறிவு றுத்தப்பட்டு வருகிறது.

    முதுமலையில் இருந்து கக்கனல்லா வரை சாலை செல்கிறது. இந்த சாலையின் இரு புறமும் வனப்பகுதி யாகும். இங்கு காட்டு யானை, மான், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக இந்த சாலையை தான் கடந்து வருகின்றன. அவ்வாறு கடக்கும் போது சில வனவிலங்குகள் வாக னங்களில் அடிபடுகின்றன.

    இதனால் வனவிலங்கு களின் பாதுகாப்புக்காக அப்பகு தியில் வேகத்த டைகள் அமைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து முதுமலை-கக்கனல்லா சாலையில் 18 வேகத்தடைகள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போது 8 இடங்களில் வேகத்தடைகள் அமைக்க ப்பட்டுள்ளது.

    இதனால் இந்த சாலையில் வாகனங்கள் மிதமான வேகத்துடன் இயக்கப்படும். வனவிலங்குகளும் பாதுகாக்கப்படும் என வன ஆர்வலர்களும் இயற்கை ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    • விபத்தை தடுக்க வேகத்தடைகள் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தின் வழியாக விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக இந்த பகுதியில் உள்ள பாண்டியன் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிதம்பரம்-திருச்சி 2 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் மண் ஏற்றப்பட்ட லாரி சென்றது. அதேநேரத்தில் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் ஒரு ேமாட்டார் சைக்கிளில், ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் வீரராகவன், ராகுல் காந்தி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுவதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் 2 புறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து முத்துசேர்வாமடம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×