search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி கவசம்"

    • வெள்ளி கவசத்தை அம்மனின் முகத்தில் பதித்து இரவில் பூஜை நடத்தப்பட்டது.
    • இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கவசம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை - வடசேரி சாலை முக்கம் பகுதியில் சாலையோரம் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கிரகம் வைத்து அதில் மஞ்சள் பூசி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு சுமார் அரை கிலோ மதிப்புள்ள வெள்ளி முக கவசத்தை அம்மனின் முகத்தில் பதித்து இரவில் பூஜை நடத்தப்பட்டது.

    பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் முகத்தில் இருந்த வெள்ளி கவசம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகி பாலசுப்ரமணியம், பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேபேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் முக வெள்ளி கவசத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மிகுந்த சாலையில், கதவுகள் இல்லாமல் வழிபாடு செய்து வந்த கோவிலில் இருந்த, அம்மன் முக கவசத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேவர் சிலைக்கு வழங்கப்பட்ட வெள்ளி கவசம் விஷேச நாட்களில் அணிவிக்கப்படும்.
    • முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நேற்று நடைபெற்றது.

    இதில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் வெள்ளி ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனை காட்டினார்.

    வெள்ளி கவசம்

    இதைத்தொடர்ந்து தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களிடம் தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக புதிதாக செய்யப்பட்ட வெள்ளி கவசத்தை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். வெள்ளி கவசம் 10 ½ கிலோ எடை கொண்டதாகும்.

    வெள்ளி கவசம் வழங்கும் நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வெற்றிவேல், எம்.பி.க்கள் ரவீந்திரநாத், தர்மர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக வெள்ளி கவசம் வழங்கியது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசம் வழங்கியுள்ளோம். இங்குள்ள அறக்கட்டளை நிர்வாகத்தினர் அந்த வெள்ளி கவசத்தை அவர்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டு எப்போதெல்லாம் விஷேச நாட்களில் அதனை சாற்ற வேண்டுமோ அப்போ தெல்லாம் அவர்கள் முறைப்படி சாற்றுவதற்கு உரிமை கொடுத்துள்ளோம்.

    அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர் நான் தான். அந்த அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் நான் வெள்ளி கவசம் வழங்கியிருக்கிறேன். அ.தி.மு.க.வில் 1 ½ கோடி தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இக்கோவிலில் ஆடிமாத உற்சவமான தீமிதி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு வெள்ளி கவசங்கள் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே இரட்டைகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆடிமாத உத்சவமான தீமிதி உற்சவம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இக்கோவில் உற்சவம் அம்மனுக்கு வெள்ளி கவசங்கள் உபயமாக மறைந்த பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் உறவினர்களான சிவகுமார், செல்வமுத்துகுமரன், நடராஜன், அபிஷேக், பாலமுருகன், ஆகியோர் கோவில் தலைவர் சுவாமிநாதனிடம் வழங்கினர்.

    பின்னர் வெள்ளி கவசங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு வெள்ளி கவசங்கள் சாத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    ×