இரட்டை காளியம்மன் கோவிலுக்கு வெள்ளி கவசங்கள் வழங்கல்

இக்கோவிலில் ஆடிமாத உற்சவமான தீமிதி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு வெள்ளி கவசங்கள் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த இரட்டை காளியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த இரட்டை காளியம்மன்.
Published on

சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே இரட்டைகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆடிமாத உத்சவமான தீமிதி உற்சவம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இக்கோவில் உற்சவம் அம்மனுக்கு வெள்ளி கவசங்கள் உபயமாக மறைந்த பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் உறவினர்களான சிவகுமார், செல்வமுத்துகுமரன், நடராஜன், அபிஷேக், பாலமுருகன், ஆகியோர் கோவில் தலைவர் சுவாமிநாதனிடம் வழங்கினர்.

பின்னர் வெள்ளி கவசங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு வெள்ளி கவசங்கள் சாத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com