மாரியம்மன் கோவிலில் 1/2 கிலோ வெள்ளி கவசம் திருட்டு

வெள்ளி கவசத்தை அம்மனின் முகத்தில் பதித்து இரவில் பூஜை நடத்தப்பட்டது.இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கவசம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
திருட்டு நடந்த மாரியம்மன் கோவில்.
திருட்டு நடந்த மாரியம்மன் கோவில்.
Published on

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை - வடசேரி சாலை முக்கம் பகுதியில் சாலையோரம் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கிரகம் வைத்து அதில் மஞ்சள் பூசி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு சுமார் அரை கிலோ மதிப்புள்ள வெள்ளி முக கவசத்தை அம்மனின் முகத்தில் பதித்து இரவில் பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் முகத்தில் இருந்த வெள்ளி கவசம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

இது குறித்து கோவில் நிர்வாகி பாலசுப்ரமணியம், பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேபேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் முக வெள்ளி கவசத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மிகுந்த சாலையில், கதவுகள் இல்லாமல் வழிபாடு செய்து வந்த கோவிலில் இருந்த, அம்மன் முக கவசத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com