search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெந்து தணிந்தது காடு"

    • கவுதம் மேனன் இயக்கியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    சிம்பு

    இப்படம் நேற்று (15-09-2022) தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே திரைபிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    சிம்பு

    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சிம்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், " நான் காட்டு பசியில் இருக்கிறேன். அதனால், திரைப்பட கதைகள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். அதிக கதைகள் வருகிறது இருந்தாலும் என்னுடைய காட்டு பசிக்கு தீணி போடும் வகையில் வரும் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று பேசியுள்ளார்.

    • 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சித்தி இட்னானி.
    • இவர் சமீபத்திய பேட்டியில் அளித்த பேட்டியில் சிம்பு குறித்து பேசியுள்ளார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து நேற்று வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் அவருக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம், "காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டுமென்றால் யாருக்கு கொடுப்பீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சித்தி இட்னானி, "அனைவருக்குமே தெரியும். தமிழகத்தின் தகுதியான 'பேச்சிலர்' சிம்புதான் என்று. எனவே காதல் ரோஜாக்களை அவரிடம்தான் கொடுப்பேன்" என்றார்.

    சித்தி இட்னானி

    சித்தி இட்னானி

    மேலும் அவர் கூறுகையில், "சிம்பு விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும். அவருக்கான ஜோடி விரைவில் வந்து அவருடன் இணைய இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டார்.

    • கவுதம் மேனன் இயக்கியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    வெந்து தணிந்தது காடு

    இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே திரைபிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    வெந்து தணிந்தது காடு

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "படத்தை பற்றி நல்ல செய்திகளை கேள்வி படுகிறேன். படம் பார்க்க காத்திருக்கிறேன். படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிம்பு, சூர்யாவின் வாழ்த்துக்கு, "மிக்க நன்றி அண்ணா" என்று பதிவிட்டுள்ளார்.

    • கவுதம் மேனன் இயக்கியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    வெந்து தணிந்தது காடு

    இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர்.

    வெந்து தணிந்தது காடு

    இதையடுத்து, 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பேசிய நடிகர் சிம்பு ''எல்லோரும் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும். அவர் வேற லெவல். படத்துக்கு அவர் தனி புரொமோஷன் செய்துள்ளார். நன்றி கூல் சுரேஷ்'' என்று கூறினார்.

    • கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் தடை இல்லை என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக மாற்ற பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    இப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆலியின் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் 2018-ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படத்தை இயக்குவதற்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு முன்பணமாக ரூ.2 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது எங்களிடம் கூறிய அதே கதையை 'வெந்து தணிந்தது காடு' என்ற பெயரில் படமாக எடுத்து அதை நாளை வெளியிட இருப்பதாகவும் தங்களுக்கு தரவேண்டிய ரூ.2 கோடியே 40 லட்சம் பணத்தை தராமல் இந்த படத்தை வெளியிடக்கூடாது படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    இந்த மனுவானது நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்ட இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

    அதேசமயம் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது உண்மைதான் என்றும் அடுத்த படத்தை இயக்கும் முன்பாக மனுதாரருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாகவும், இது சம்மதமாக மனுதாரருடன் சமரசம் செய்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    இந்த சமரசம் செய்துக் கொள்வதற்கு மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பான உத்தரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி கவுதம் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார். தற்போதைக்கு இந்த படத்துக்கு தடை ஏதும் விதிக்கப்படாத காரணத்தினால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று தெளிவாகிறது.

    • கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் மேனன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சிம்பு - கவுதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரகுமார்

    சிம்பு - கவுதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரகுமார்

    இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக மாற்ற பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    கவுதம் வாசுதேவ் மேனன் - சிம்பு

    கவுதம் வாசுதேவ் மேனன் - சிம்பு

    இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில், "வெந்து தணிந்தது காடு படத்தை காலை 5 மணிக்கு பார்க்க வரும் ரசிகர்கள் இரவு நன்றாக தூங்கிவிட்டு வரவும். ஏனென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்" என்று கவுதம் மேனன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

    • கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரமோஷனுக்காக சிம்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக சிம்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, "வித்தியாசமான கதைகளில் நடிக்க விரும்புகிறேன். மாநாடு படம் அந்த முயற்சியில் வந்து வெற்றியும் பெற்றது. மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அதுபோல் இன்னொரு மாறுபட்ட கதை அம்சத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நான் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் தயாராகி உள்ளது.

    சிம்பு 

    சிம்பு 

    சினிமாத்தனமாக இல்லாமல் யதார்த்தமான படமாக இருக்கும். இதில் 3 தோற்றங்களில் வருகிறேன். 19 வயது இளைஞனாகவும் என்னை உருமாற்றி நடித்துள்ளேன். ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் படத்தில் உள்ளன. இது வெற்றி பெற்றால் 2-ம் பாகமும் வரும். ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் நடிப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும். ரஜினி, அஜித்குமார், விஜய் என்று யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.

    சிம்பு 

    சிம்பு 

    எனது திருமணம் குறித்து யோசித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அது நடக்கிற நேரத்தில் நடக்கும். நிறைய 2-வது, 3-வது திருமணங்கள் நடக்கின்றன. சிலர் காதலித்து விட்டு பிறகு பிரிகிறார்கள். விவாகரத்துகளும் நடக்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எனவே இதுமாதிரி பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க நல்ல மணப்பெண் அமைய காத்து இருப்பதில் தவறு இல்லை. நல்ல மணப்பெண்ணுக்காக காத்து இருக்கிறேன். ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.

    சிம்பு 

    சிம்பு 

     முத்த காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் போன்றவற்றை எனது படங்களில் திணிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். விரைவில் படம் டைரக்டு செய்வேன். இதற்காக 10 கதைகள் தயார் செய்து வைத்துள்ளேன்".

    இவ்வாறு சிம்பு கூறினார்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

    வெந்து தணிந்தது காடு

    அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் 'மல்லிப்பூ' பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் தாமரை வரிகளில் மதுஸ்ரீ பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ''வெந்து தணிந்தது காடு".
    • இப்படத்தின் வெற்றி விழாவில், சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்கவேண்டும் என்று கமல் பேசினார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ''வெந்து தணிந்தது காடு". வேல்ஸ் இண்டர் நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது, ''வெந்து தணிந்தது காடு என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள், ''தழல் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ". அதுபோல் இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், என்னை தந்தை போல் என்பார்.

    வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

    வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

    அவருக்கு, நான் தனியாக ஏதும் செய்யவில்லை. தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம்தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை கைவிட்டது இல்லை. தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும்.

    வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

    வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

    வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்துவிட்டது. வேல்ஸ் பிலிம்சில் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இம்மாதிரி வாய்ப்புகளை நான் 'மிஸ்' செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று கமல் பேசினார்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

    வெந்து தணிந்தது காடு

    அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

    இத்திரைப்படம் செப்டம்பர் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து நேற்று (02-09-2022) இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிம்பு பேசியதாவது, "எனக்கு இந்த மாதிரி பிரமாண்ட விழா எதுவும் சமீபத்தில் நடக்கவில்லை. இந்த பிரமாண்டத்தை பார்த்ததும் நம் விழா தானா என சந்தேகம் வந்துவிட்டது.

    வெந்து தணிந்தது காடு ஆடியோ வெளியீட்டு விழா

    கௌதம் வாசுதேவ் மேனனுடன் இது மூன்றாவது படம் நாங்கள் சேர்ந்தால் அதில் ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும் ஏதாவது புதிதாக செய்வோம். இந்தப்படத்திலும் அது இருக்கும். இதில் 19 வயது பையனாக நடித்திருக்கிறேன். படம் பற்றி நாம் பேசக்கூடாது ரசிகர்கள் தான் படத்தை பார்த்து சொல்ல வேண்டும். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்" என்று பேசினார்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

    வெந்து தணிந்தது காடு

    அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

    வெந்து தணிந்தது காடு

    இத்திரைப்படம் செப்டம்பர் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

    வெந்து தணிந்தது காடு

    அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

    இத்திரைப்படம் செப்டம்பர் 15-ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2-ந் தேதி சென்னை பல்லாவரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும், அதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி இடம்பெறும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது.

    வெந்து தணிந்தது காடு

    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு 'வெந்து தணிந்தது காடு' படக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×