search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெந்தய டீ"

    • வெந்தய டீ குடித்து வர இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
    • வெறும் வயிற்றி வெந்தயம் சாப்பிட்டு வருவது நல்லது.

    தொப்பை குறைய வெந்தய டீ:

    செய்முறை:

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு 15 முதல் 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற தொப்பை குறைய வழிவகுக்கின்றது.

    வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அதுவும் காலையில் வெறும் வயிற்றி வெந்தய டீ குடித்து வரும்போது இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    வெந்தயத்தில் அதிக அளவு அமினோ ஆசிட் உள்ளதால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றி வெந்தயம் சாப்பிட்டு வருவது நல்லது.

    வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடித்துவர மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்கிறது.

    அதிலும் வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை குடித்து வந்தாலோ அல்லது காலை வெந்தயத்தை சாப்பிட்டு தண்ணீரை குடித்து வந்தாலோ செரிமானப்பிரச்சினைகள், அல்சர் போன்ற பிரச்சினைகள் சரியாகும்.

    ×