search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீணா விஜயன்"

    • தனியார் நிறுவனம் 1.75 கோடி ரூபாயை வீணா விஜயன் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றச்சாட்டு.
    • வீணா விஜயன் நிறுவனம் தனியார் நிறுவனத்திற்கும் எந்த சேவையும் வழங்காத நிலையில் இந்த பணம் பரிமாற்றம்.

    கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் மாநில அரசாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் பினராயி விஜய் மகளாக வீணா விஜய் மீது அமலாக்கத்துறை பணமோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ளது. விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார். வீணா விஜயனும், அவரது ஐ.டி. நிறுவனமும் தனியார் மினரல் நிறுவனத்திற்கும் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.பி. கோவிந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எம்.பி. கோவிந்தன் கூறியதாவது:-

    நாட்டின் முக்கியமான அமைப்புகளில் ஒன்று அமலாக்கத்துறை. இது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை உரிய முறையில் எதிர்கொள்வோம். நீங்கள் அரசியலில் யாரையும் குறி வைக்கலாம். ஆனால் யார் குறி வைக்கிறது என்பதுதான் கேள்வி. அமலாக்கத்துறை பா.ஜனதாவுக்கு தினசரி கூலி போன்றதாகிவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தொண்டர்களும் இதுபோன்ற தந்திரங்கள் மற்றும் வழக்குகளுக்கு சரண் அடைபவர்கள் அல்ல.

    இவ்வாறு கோவிந்தன் தெரிவித்துள்ளார்.

    கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட் என்ற நிறுவனம் வீணாவின் Exalogic Solutions நிறுவனத்திற்கு முறைகேடாக 1.72 கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளது. ஆனால் ஐ.டி. நிறுவனமான Exalogic Solutions அந்த தனியார் நிறுவனத்திற்கு ஒரு சேவையும் செய்யவில்லை.

    எஸ்.எஃப்.ஐ.ஓ. (Serious Fraud Investigation Office) வழக்கு விசாரணையை தொடங்கியதற்கு எதிராக வீணா விஜயன் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.

    எஸ்.எஃப்.ஐ.ஓ. வழக்குப்பதிவு செய்ததை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    ×