search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ காட்சி"

    • மாணவ- மாணவியர்கள் நாள் தோறும் காலை மற்றும் மாலையில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
    • மண்டல மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளும் இந்த மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது.இங்கு கால்பந்து, கூடைப்பந்து,கையுந்துபந்து, ஸ்கேட்டிங்,கிரிக்கெட், ஹாக்கி,ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க ஆயுத்தமாகும் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ- மாணவியர்கள் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

    அத்துடன் மண்டல மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் இந்த மைதானத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உடுமலை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தென்மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த 26 - ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தென்தமிழகம் உட்பட கேரளாவில் இருந்து 48 அணிகளாக கால்பந்து வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    போட்டியை பார்வையாளர் பார்த்து ரசிக்கும் விதமாக மைதானத்தில் பிளாஸ்டிக் சீட்டுகளால் கேலரி அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மாலை கால் இறுதிப் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது திடீரென இடி,மின்னல், பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கேலரி மற்றும் சேர்கள் காற்றில் பறந்தது. இதனால் கேலரியில் மழைக்கு ஒதுங்கிய வீரர்கள்,பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்து மைதானத்தின் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.பின்னர் மழை ஓய்ந்த பின்பு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

    இதனால் போட்டிகள் பாதிக்கப்பட்டது.இந்த சம்பவத்தில் மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.நேற்று வழக்கம் போல் போட்டிகள் நடைபெற்றது. இன்று இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்க இருக்கிறது.மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கேலரி காற்றில் பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • திருப்பூர் - பல்லடம் சாலை அதிக அளவில் வாகனங்கள் பயன்படுத்தப்படும் முக்கிய சாலை
    • சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் ஏராளமானோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரைச் சேர்ந்தவர் காட்டான். இவர் பல்லடம் ராயர் பாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் அவரது மகனை பார்க்க சென்றுள்ளார் .அப்போது சாலையோரம் இருந்த குழியில்அவரது வாகனம் இறங்கியது .இதில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் காட்டான் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தின் சிசிடிவி. காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் - பல்லடம் சாலை அதிக அளவில் பயன்படுத்தப்படும் முக்கிய சாலையாக உள்ளது. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் ஏராளமானோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சாலையில் உள்ள குழிகளை மூடி விபத்து நடப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×