search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய உபகரணங்கள்"

    • வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் அணி தலைவர் விசுவராஜ் விவசாயிகளுக்கு வெங்காயம், சிறுகிழங்கு சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளித்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் விவசாயிகளுக்கு சட்டி, மம்பட்டி, களவெட்டி வழங்கினார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்கு உட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில், திட்டத்தின் அணி தலைவர் விசுவராஜ் கலந்து கொண்டு 90 விவசாயிகளுக்கு வெங்காயம், சிறுகிழங்கு சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளித்தார். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் விவசாயிகளுக்கு உபகரணங்களான சட்டி, மம்பட்டி, களவெட்டி போன்றவற்றை வழங்கினார். இதில் துணைத்தலைவர் இசேந்தரன், 5-வது வார்டு உறுப்பினர் ராஜா, 4-வது வார்டு உறுப்பினர் சுகிதா மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.34,000 விவசாயி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்
    • வேளாண் அதிகாரி தகவல்

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் பகுதியில் வேளாண்துறை அலுவலகம் உள்ளது.

    உழவர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேசிய மானாவாரி எண்ணெய் பாதுகாப்பு இயக்கம் இணைந்து 2022-23 ஆண்டுக்கான கலைஞர் ஒருங்கிணைந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கர்ணாவூர் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ரூ.1,35,800 மதிப்புள்ள சுயல் கலப்பையை சதவீதம் மானிய மாக ரூ.34,000 விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் இந்த சுயல் கலப்பையை காவே ரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் வழங்கினார்.

    உடன் வேளாண் உதவி அலுவலர் ஆகாஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×