search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agricultural equipment"

    • ரூ.34,000 விவசாயி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்
    • வேளாண் அதிகாரி தகவல்

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் பகுதியில் வேளாண்துறை அலுவலகம் உள்ளது.

    உழவர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேசிய மானாவாரி எண்ணெய் பாதுகாப்பு இயக்கம் இணைந்து 2022-23 ஆண்டுக்கான கலைஞர் ஒருங்கிணைந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கர்ணாவூர் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ரூ.1,35,800 மதிப்புள்ள சுயல் கலப்பையை சதவீதம் மானிய மாக ரூ.34,000 விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் இந்த சுயல் கலப்பையை காவே ரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் வழங்கினார்.

    உடன் வேளாண் உதவி அலுவலர் ஆகாஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வட்டார வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் வேளாண் உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
    • கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் இருக்கூர், பிலிக்கல்பா ளையம், அ.குன்னத்தூர் ஆகிய கிராமத்திற்கு (பெரிய மருதூர், அய்யம்பாளையம், பஞ்சம் பாளையம் , செஞ்சு டையாம்பாளையம், வலசு பாளையம் தெற்கு , வடக்கு செல்லப்பம்பாளையம்) தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள்(பேட்டரி ஸ்பிரேயர்), வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி) மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, ரேசன் அட்டை, புகை படம் -1 ஆகியவற்றை கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை.

    வேளாண்மை உபகரணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் அல்லது உழவர் பாதுகாப்பு அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என கபிலர்மலை வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை உதவி வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி), உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
    • வேளாண்மை உபகரணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் பரமத்தி ஒன்றியம் நல்லூர், பிள்ளைகளத்தூர், வில்லிபாளையம், இருட்ட ணைஆகிய கிராமங்களுக்கு தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் (பேட்டரி ஸ்பிரேயர்), வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி), உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    எனவே விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, ரேசன் அட்டை நகல் ஆகியவற்றை பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு கொண்டுவந்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

    வேளாண்மை உபகரணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என பரமத்தி உழவர் நலத்துறை வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    ×