வேளாண்மை உபகரணங்கள் மானிய விலையில் வழங்கல்

வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி), உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. வேளாண்மை உபகரணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
வேளாண்மை உபகரணங்கள் மானிய விலையில் வழங்கல்
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் பரமத்தி ஒன்றியம் நல்லூர், பிள்ளைகளத்தூர், வில்லிபாளையம், இருட்ட ணைஆகிய கிராமங்களுக்கு தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் (பேட்டரி ஸ்பிரேயர்), வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி), உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

எனவே விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, ரேசன் அட்டை நகல் ஆகியவற்றை பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு கொண்டுவந்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

வேளாண்மை உபகரணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என பரமத்தி உழவர் நலத்துறை வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com