search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளாத்திகுளம்"

    • முகாமில் பயனாளிகளுக்கு இலவச பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வழங்கினார்.
    • வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு மக்களின் குறைகளை எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சூரங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் பயிறு, சிறு தானியங்கள், சிகப்பு கடல் பாசி, உரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, சூரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் ராமசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தூர்பாண்டியன், மருதகனி சுப்பிரமணியன், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், சூரங்குடி கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் ராமச்சந்திரன், தங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதிதாசன், தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட துறைசார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
    • ரூ. 6 கோடியே 40 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள்

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் இருந்து இடைச்சியூரணி செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 63 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் பாலம் அமைத்தல், மாதலப்புரத்தில் இருந்து கந்தசாமிபுரம் செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தில் ரூ.2 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைத்தல், பூதலப்புரம் முதல் சேர்வைகாரன்பட்டி வரை ரூ. 1 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைத்தல்,

    கந்தசாமிபுரம் சாலையில் இருந்து புது சின்னையாபுரம் செல்லும் சாலையில் ரூ. 90 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைத்தல், புதூர் பேருந்து நிலையத்தில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைத்து மேம்பாட்டு பணிகள் செய்தல் என மொத்தம் ரூ. 6 கோடியே 40 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நடைபெற்ற பூமி பூஜையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    மேலும் பணிகளை தரத்துடன் விரைவாக முடித்து உரிய காலத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், புதூர் மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேச பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி சுப்பிரமணியன், கிளை செயலாளர்கள் முத்துராஜ், தன்ராஜ், லட்சுமணன், விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×