search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரட்டல்"

    • மார்த்தாண்டம் அருகே சினிமா போல சம்பவம்
    • அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயற்சி

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட உண்ணாமலைகடை பகுதியில் மார்த்தாண்டம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ்,தலைமை காவலர் ராஜகுமார் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது. அதனை நிறுத்தும் படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீ சார் பின்னர் சுதாரித்துக் கொண்டு காரை விரட்டிச் சென்றனர்.

    சுமார் 5 கி.மீட்டர் தூரம் காரை போலீசார் பின் தொடர்ந்த நிலையில் திக்குறிச்சி வழியாக சென்ற கார் பேரை பகுதியில் சாலை ஓரம் திடீரென நின்றது. அதில் இருந்து 2 பேர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசார் அந்தக் காரை சோதனை செய்த போது மூடை மூடையாக ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.விசாரணையில் அந்த அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். பின்னர் காரை விளவங்கோடு தாலுகா அலு வலகத்திலும், அரி சியை காப்புக்காடு அரசு குடோ னிலும் ஒப்படைத்தனர்.தொடர்ந்து அரிசி கடத்தி யது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? தப்பியோடியவர்கள் யார்? என்பது தொடர்பாக போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×